பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற தர்ஷனின் முன்னாள் காதலி சனம் ஷெட்டி. இவர் சில திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும், தர்ஷன் தன்னை ஏமாற்றிவிட்டதாக புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
தற்போது பிக்பாஸ் 4வது சீசனில் சனம் ஷெட்டி கலந்து கொண்டுள்ளார். அவரை பலரும் கார்னர் செய்தாலும், தனது தனித்தன்மையால் அனைத்தையும் சமாளித்து பிக்பாஸ் வீட்டில் நீடித்து வருகிறார்.
இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்லும் முன் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நடிகை சிந்துவுக்கு பண உதவி செய்துள்ளது தெரியவந்துள்ளது.
நடிகை சிந்து தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Source: Vellithirai News