திரையுலகில் சூர்யா – ஜோதிகா இணைந்து நடித்த பல படங்கள் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இருவரும் காதல் வசப்பட்டு நிஜ வாழ்விலும் திருமணம் செய்து கொண்டனர். திருமணம் செய்த பின் இருவரும் இணைந்து நடிக்கவில்லை. ஆனால், ஜோதிகா சில படங்களில் நடித்து விட்டார்.
ஜோதிகாவுடன் மீண்டும் இணைந்து நடிப்பீர்களா? என சமீபத்தில் சூர்யாவிடம் கேட்டதற்கு, அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக பதிலளித்துள்ளார்.
இந்நிலையில், தற்போது அதற்கான நேரம் கனிந்துள்ளது. சில்லுக்கருப்பட்டி படத்தை இயக்கிய ஹலிதா ஷமீம் இப்படத்தை இயக்கவுள்ளாராம். இப்படத்தில் 14 வருடங்களுக்கு பின் ஜோதிகாவும், சூர்யாவும் இணைந்து நடிக்கவுள்ளனர். இப்படத்தை மலையாள இயக்குனர் அஞ்சலி மேனன் தயாரிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
இப்படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Source: Vellithirai News