சமீபத்தில் விஜய் பெயரில் அவரின் தந்தை தேர்தல் ஆணையத்தில் கட்சியை பதிவு செய்ய, அதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என விஜய் பரபரப்பு அறிக்கை வெளியிட்டார்.
மேலும், தன்னுடையை பெயரையோ, புகைப்படத்தையோ பயன்படுத்தினால் நடவடிக்கை எடுப்பேன் எனவும் எச்சரித்திருந்தார். இந்த விவகாரம் தமிழ் சினிமா உலகம் மற்றும் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், பனையூரில் உள்ள தனது இல்லத்தில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் ஆலோசனையில் வருவதாகவும், மொத்தமுள்ள 200 மாவட்ட செயலாளர்களில் 50 பேர் மட்டும் இந்த ஆலோசனையில் ஈடுபட்டதாக செய்திகள் வெளியானது.
ஆனால், உண்மையில் இந்த கூட்டத்தில் விஜய் கலந்து கொள்ளவே இல்லையாம். வெளியூரிலிருந்து 50 நிர்வாகிகள் வந்து விஜயின் வீட்டில் காத்திருந்தும் விஜய் செல்லவில்லை. எனவே, அனைவரும் ஏமாற்றம் அடைந்து வீடு திரும்பியதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
Source: Vellithirai News