தமிழ் சினிமாவில் எதையும் வித்தியாசமான கோணத்தில் யோசிப்பவர் பார்த்திபன். ஒரே ஒருவர் நடிகர் மட்டுமே நடிக்கும் ‘ஒத்த செருப்பு’ படத்தை இயக்கி பாராட்டுக்களையும், விருதுகளையும் பெற்றவர்.
தற்போது தனது அடுத்த படத்திற்கு தயாராகி விட்டார். இப்படத்தில் வித்தியாசம் என்னவெனில், இப்படத்தின் முழுப்படமும் ஒரே ஷாட்டில் எடுக்கவுள்ளாராம். இத்தனைக்கும் இப்படத்தில் நிறைய நடிகர்கள் நடிக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.
எனவே, கடந்த ஒரு மாதமாக ஒத்திகை நடந்து வருகிறதாம். எப்போது, ஒரே ஷாட்டில் அனைத்து நடிகர்களும் சரியாக நடிக்கின்றனரோ அப்போது படப்பிடிப்பிற்கு செல்வோம் என பார்த்திபன் கருகிறாராம்.
ரசிகர்களுக்கு காத்திருக்கு விருந்து!.
Source: Vellithirai News