கடந்த மார்ச் மாதம் மூடப்பட்ட தியேட்டர்களை திறக்க தற்போதுதான் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனவே, சில ஊர்களில் சில தியேட்டர்கள் மட்டும் திறக்கப்பட்டு பழைய படங்கள் திரையிடப்பட்டுள்ளன. அதில், சொற்பமான ரசிகர்களே வந்து படம் பார்க்கின்றனராம். பல ஊர்களில் தியேட்டர்கள் திறக்கப்படவே இல்லை.
இந்நிலையில், தீபாவளிக்கு என்னென்ன திரைப்படங்கள் தியேட்டரில் ரிலீஸாகிறது என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு எழுந்துள்ளது. மாஸ்டர் படம் எப்போது வெளியீடு என்பதே தெரியவில்லை. சூர்யா நடித்த சூரரைப்போற்று நாளை அமேசான் பிரைமில் வெளியாகிறது. அதேபோல், ஆர்.ஜே.பாலாஜி, நயன்தாரா நடித்துள்ள மூக்குத்தி அம்மன் படம் நேரிடையாக விஜய் தொலைக்காட்சியிலும், ஹாட் ஸ்டார் ஆப்பிலும் தீபாவளியன்று வெளியாகவுள்ளது.
தியேட்டரில் இரண்டாம் குத்து, எம்.ஜி.ஆர் மகன், களத்தில் சந்திப்போம் உள்ளிட்ட சில படங்கள் வெளியாவதாக கூறப்பட்டது. தற்போது அதிலிருந்து அனைத்து படங்களும் பின் வாங்கிவிட்டன. ஆனால், ‘இரண்டாம் குத்து’ படம் மட்டுமே தியேட்டரில் வெளியாகவுள்ளதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளது. ஒரு பட்சம் மட்டுமே ரிலீஸ் என்பதால் அதிக தியேட்டரில் இப்படம் வெளியாக வாய்ப்பிருக்கிறது.
Source: Vellithirai News