சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள திரைப்படம் சூரரைப்போற்று திரைப்படம் அமேசான் பிரைமில் வெளியாகியுள்ளது. இப்படம் ரசிகர்கள், விமர்சகர்கள் மற்றும் திரைத்துறை பிரபலங்கள் எல்லோரிடமும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், அமேசான் பிரைமில் எந்த திரைப்படமும் செய்யாத சாதனையை சூரரைப்போற்று நிகழ்த்தியுள்ளது. தியேட்டரில் இப்படம் வெளியாகததால் வேறு வழியின்றி அமேசான் பிரைமில் லட்சக்கணக்கானோர் இப்படத்தை பார்த்துள்ளனர். இதுவரை படம் பார்த்தவர்களின் எண்ணிக்கை 11 லட்சத்தை தாண்டிவிட்டதாக கூறப்படுகிறது. இவ்வளவு பார்வையாளர்களை இதுவரை எந்த திரைப்படமும் அமேசான் பிரைமில் பெற்றதில்லை எனக்கூறப்படுகிறது.
ஏற்கனவே பொன் மகள் வந்தாள், ஜானி, பென்குயின் உள்ளிட்ட சில படங்கள் அமேசான் பிரைமில் வெளியானது குறிப்பிடத்தக்கது.
Source: Vellithirai News