மறைந்த தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.அழகிரி தனிக்கட்சி துவங்க திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
திமுகவின் தென்மண்டல செயலாளராக இருந்த மு.க.அழகிரி கடந்த 2014ம் ஆண்டு கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அதன்பின் திமுகவிற்கு பலமுறை தூதுவிட்டும் அவர் கட்சியில் சேர்த்துக்கொள்ளப்படவில்லை.
இந்நிலையில், விரைவில் அவர் தனிக்கட்சி துவங்க திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதற்காக வருகிற 20ம் தேதி அவர் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை செய்யவுள்ளார். அதன்பின் அவர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்யவும் திட்டமிட்டுள்ளார்.
எனவே, அழகிரி துவங்கும் தனிக்கட்சி திமுகவில் சலசலப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Source: Vellithirai News