திமுக தலைமையுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக கட்சியிலிருந்து விலக்கி வைக்கப்பட்டவர் மு.க.அழகிரி. கருணாநிதியின் மறைவுக்கு பின் கட்சியை ஸ்டாலின் நிர்வகிக்க துவங்கி பின் அழகிரி அரசியலில் இருந்தே விலகியிருந்தார்.
இந்நிலையில், விரைவில் அவர் தனிக்கட்சி துவங்கவிருப்பதாகவும், வருகிற 20ம் தேதி கட்சி துவங்குவதுபற்றி தனது ஆதரவாளர்களுடன் அவர் ஆலோசனை நடத்தவுள்ளார். மேலும், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்யவும் அவர் திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. அநேகமாக, அவரின் கட்சிக்கு கலைஞர் திராவிட முன்னேற்றக்கழகம் என பெயர் வைக்க வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.
இந்நிலையில், திடீர் திருப்பமாக வருகிற 21ம் தேதி சென்னை வரும் பாஜக தலைவர் அமித்ஷாவுயுடன் அழகிரிக்கு சந்திப்பு நடக்கவுள்ளது. இந்த சந்திப்பில் பாஜகவுடன் இணைந்து பணியாற்றுவது குறித்து விவாதிக்கப்படும் எனத்தெரிகிறது. அதன்பின் பாஜகவுடன் கூட்டணி அமைத்து அவர் தேர்தலை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.ஏற்கனவே அதிமுக- பாஜக கூட்டணி உறுதி ஆகிவிட்டவ் நிலையில், அழகிரி அந்த கட்சிகளோடு இணைந்து செயல்படுவார் எனத்தெரிகிறது.
Source: Vellithirai News