வருத்தப்பாடாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் உள்ளிட்ட பல படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் தவசி.
குறிப்பாக ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் ‘கருப்பன் குசும்புக்காரன்’என அவர் பேசிய வசனம் மிகவும் பிரபலம். இப்போதும் அவரின் அந்த புகைப்படத்தை நெட்டிசன்கள் புகைப்பட மீம்ஸாக பல இடங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். புற்றுநோய் அவரின் உடலை உருக்கிவிட்டது. இது தொடர்பான அவரின் புகைப்படம் வெளியாகி பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
தனது சிகிச்சைக்கு திரைத்துறையினர் உதவ வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். அவருக்கு நடிகர்கள் சிவகார்த்திகேயன், சூரி உள்ளிட்டோர் சிகிச்சைக்கு நிதியுதவி செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Source: Vellithirai News