கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் திரைப்படம் டாக்டர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் இடம் பெற்ற ‘செல்லம்மா செல்லம்மா’ பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் நேரத்தில் கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் படப்பிடிப்பு முடங்கிப்போனது. தற்போது சில நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு பாக்கி உள்ளது எனவே, டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், தற்போது வெளியாகியுள்ள புதிய போஸ்டரில் அடுத்த வருடம் கோடை கால விடுமுறையில் இப்படம் வெளியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கு இன்னும் 5 மாதம் இருப்பதால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Source: Vellithirai News