ஏப்ரல் 20, 2021, 3:02 காலை செவ்வாய்க்கிழமை
More

    வாங்க பாஸ் படம் பண்ணுவோம்… முருகதாஸுக்கு கை கொடுத்த சூர்யா…

    மாஸ்டர் படத்திற்கு பின் சன் பிக்சர்ஸ் தயாரிக்க, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் ஒரு புதிய படத்தில் நடிப்பதாக இருந்தது.

    மாஸ்டர் படத்திற்கு பின் சன் பிக்சர்ஸ் தயாரிக்க, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் ஒரு புதிய படத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால், சில பிரச்சனைகளால் அப்படத்திலிருந்து ஏ.ஆர்.முருகதாஸ் விலகிவிட்டார். எனவே, விஜயை அடுத்து யார் இயக்கப்போகிறார் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    மகிழ் திருமேனி, பேரரசு, கௌதம் மேனன், அருண்ராஜா காமராஜா உள்ளிட்ட இயக்குனர்களின் பெயர் அடிபட்டது. அதன்பின் கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் படத்தை இயக்கி வரும் நெல்சன் பெயர் அடிபட்டது. நெல்சன் கூறிய கதை விஜய்க்கு பிடித்திருந்தாலும், டாக்டர் படத்தை முடித்து விஜய் படத்திற்கு அவர் இன்னும் சில மாதங்கள் ஆகும் என்பதால், இடையில் எஸ்.ஜே.சூர்யா கதை விஜய்க்கு பிடித்துப்போனதாகவும், விஜயின் 65வது படத்தை அவர் இயக்க வாய்ப்பிருப்பதாக செய்திகள் கசிந்துள்ளது.

    அதேநேரம், முருகதாசை தொடர்பு கொண்ட நடிகர் சூர்யா ‘வாங்க பாஸ்.. விஜய் போனா என்ன?.. நாம சேர்ந்து படம் பண்ணுவோம்’ என அழைப்பு விடுத்துள்ளதாக செய்திகள் கசிந்துள்ளது. சூர்யாவுக்கு கஜினி எனும் மாபெரும் வெற்றிப்படத்தை கொடுத்தவர் முருகதாஸ் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், சூர்யாவை வைத்து ஏழாம் அறிவு படத்தையும் அவர் இயக்கியுள்ளார்.

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    வெள்ளித்திரைClick
    சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

    Latest Posts

    spot_imgspot_img

    Follow Dhinasari on Social Media

    18,231FansLike
    0FollowersFollow
    18FollowersFollow
    74FollowersFollow
    1,114FollowersFollow
    0SubscribersSubscribe
    -Advertisement-
    Translate »