October 18, 2021, 1:08 pm
More

  ARTICLE - SECTIONS

  விஜய் போன்றோர் செய்யும் வரி ஏய்ப்புக்கள் GST ஆல் குறைந்துள்ளது: பொருளாதார நிபுணர்!

  vijai - 1

  நடிகர் விஜய் கடந்த 2013 ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காரை இறக்குமதி செய்திருந்தார்.

  ரூ 8 கோடிக்கு மேல் வாங்கப்பட்ட இந்த காருக்கு, சுமார் 1.6 கோடி நுழைவு வரி விதிக்கப்பட்டது. அதை கட்ட மறுத்த விஜய், கோர்ட்டில் வரிவிதிப்புக்கு தடைகோரி வழக்கு தொடர்ந்தார்.

  இதற்கு அரசு நுழைவு வரி விதிக்கப்பட்டிருந்ததால், அதை தடை செய்யக்கோரி நடிகர் விஜய் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

  அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

  சமூக நீதிக்காக பாடுபடுவதாக கூறிக்கொள்ளும் சினிமா நடிகர்கள் வரி ஏய்ப்பு செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என நடிகர் விஜய்க்கு நீதிமன்றம் தனது கடும் கண்டனத்தை தெரிவித்தனர். அதோடு ரியல் ஹீரோக்களாக நடிகர்கள் இருக்க வேண்டும் என்றும், ரீல் ஹீரோக்களாக இருக்க கூடாது என கூறினர். வரி என்பது நன்கொடையல்ல, கட்டாய பங்களிப்பு என காட்டமாக கூறிய நீதிபதி, நடிகர் விஜய்க்கு ரூ 1 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

  இதையடுத்து, நடிகை கஸ்தூரி, விஜய்யின் வெளிநாட்டு காரின் படத்தை வெளியிட்டு, அதனுடன், விஜய் வழக்கில் கோர்ட் கூறிய தீர்ப்பினை மேற்கோள்காட்டி டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

  கஸ்தூரியின் பதிவில்,
  இன்று தலைப்பு செய்தியில் வந்த நடிகர் விஜய்யின் ரோல்ஸ் ராயல்ஸ் கோஸ்ட் இதுதான் என சுட்டிக்காட்டி கலாய்த்துள்ளார்.
  இந்த டிவிட் வைரலாகி வருகிறது.

  இந்நிலையில் இந்த நீதிமன்ற தீர்ப்புக்கு ஆதரவாக சமூக வலைத்தளத்தில் பல கருத்துக்கள் உலா வருகின்றன. அதோடு ‘வரிகட்டுங்க விஜய்’ என்ற ஹேஷ்டேக்கை சமூக வலைத்தளமான ட்விட்டரில் நெட்டிசன்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

  ரியல் ஹீரோவாக இருங்க விஜய் என நீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி கேலி செய்து வருகின்றனர்.

  நடிகர்கள் ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் சர்ச்சையில் சிக்கிக்கொள்வது இது முதல்முறையல்ல.

  joshap vijai - 2

  கடந்த 2018 ஜனவரி மாதத்தில் நடிகர் அமலா பால் தனது ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு கேரளாவில் வரி கட்டுவதைத் தவிர்ப்பதற்காக அதனைப் புதுச்சேரியில் பதிவு செய்து வரி ஏய்ப்பு செய்தது சர்ச்சைக்குள்ளானது.

  ஃபாஹத் பாசில், சுரேஷ் கோபி எனப் பல நடிகர்கள் இதே போலத் தங்களது சொகுசு ரோல்ஸ் ராய்ஸ்களுக்கு வரி செலுத்தாமல் ஏய்ப்பு செய்தது பரபரப்பானது.

  கேரளாவில் மட்டும் மொத்தம் 850 பேர் இதுபோல சொகுசு கார்களுக்கு வரி கட்டுவதைத் தவிர்க்க புதுச்சேரியில் பதிவு செய்தது தெரிய வந்தது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் மாடல் ரக காரின் தொடக்க விலை 6.95 கோடி.ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு கார்களுக்கான நுழைவு வரி அதன் மொத்த மதிப்பில் 14.5 சதவிகிதம். ஆக 47.93 லட்சம் ரூபாய் வரி ஏய்ப்பு செய்யப்பட்டிருக்கிறது.

  vijai 1 - 3

  இந்தியாவில் தனி நபர்கள் மற்றும் தனியார் பன்னாட்டு நிறுவனங்களின் வரி ஏய்ப்பினால் மட்டும் வருடாந்திரமாக ரூ.75000 கோடி வரை வரிகளில் இழப்பு ஏற்படுவதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.41 சதவிகிதம். நமது சுகாதார பட்ஜெட்டில் 44.70 சதவிகிதம், கல்விக்கான செலவீட்டில் 10.68 சதவிகிதம் , கொரோனா பேரிடர் காலத்தில் தூக்கம் தொலைத்து வேலை பார்க்கும் செவிலியர்களில் 42.30 லட்சம் நர்சுகளில் வருடாந்திர சம்பளம் என வரிசையாகப் பட்டியலிடுகிறது இந்த புள்ளிவிவரத்தைக் கொடுத்திருக்கும் ‘ஸ்டேட் ஆஃப் டேக்ஸ் ஜஸ்டிஸ்’ அறிக்கை.

  பொருளாதார நிபுணர் ஸ்ரீராம் சேஷாத்திரி இது பற்றி கூறும் போது இந்தியாவில் வரி ஏய்ப்பைவிட வரி கட்டுவதை சட்ட ரீதியாகத் தவிர்ப்பதுதான் (Tax avoidance) அதிகம்.

  தனது வருமானத்தையே காட்டாமல் இருப்பதுதான் வரி ஏய்ப்பு எனப்படும். ஆனால் தன்னுடைய வருமானத்தைக் காண்பித்து அதில் ஏற்பட்ட செலவுகள் என நண்பர்களுடன் ஹோட்டலில் சாப்பிட்ட பில்லை எல்லாம் அதில் இணைத்துக் காண்பிப்பது வரி கட்டுவதைத் தவிர்ப்பதன் கீழ் வரும்.

  ஜி.எஸ்.டி. வந்த பிறகுதான் இதுபோன்ற நிறைய செலவுகளைச் சேர்ப்பதில் சில கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டது. அது தனிநபர் தன்னுடைய செலவைக் காண்பித்து வரி கட்டுவதைத் தவிர்ப்பதைத் தடுத்தது. நடிகர் விஜயின் ரோல்ஸ் ராய்ஸ் விவகாரத்தில் வரி செலுத்துவதைத் தவிர்ப்பதற்க்குக் கோரிக்கை வைத்ததே அபத்தம்.

  இறக்குமதிக்கான நுழைவு வரி என்பது சட்டம். வரிச்சலுகைகளுக்கு சட்டத்தில் இடம் கிடையாது. பார்க்கப்போனால் வரியைச் செலுத்தாத நிலையில் இந்த சொத்தை ஜப்தி செய்ய சுங்கத்துறைக்கு அதிகாரம் உண்டு. நடிகர்கள் போன்ற தனிநபர்கள் இல்லாமல் இங்கே இருக்கும் குறுநிறுவனங்களால் அரசுக்கு ஏற்படும் வரி இழப்பீடுதான் அதிகம். ஆனால் இதுபோன்ற இழப்பீடுகள் ஜி.எஸ்.டி. வந்த பிறகு கனிசமாகவே குறைந்துள்ளது’ என்கிறார்.

  பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் அவர்களிடம் ரோல்ஸ் ராய் கார் உள்ளது. அதேபோல் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, கோலிவுட் இயக்குனர் ஷங்கர், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார், தெலுங்கு பிரபல நடிகர் சிரஞ்சீவி, கோத்ரேஜ் நிறுவனத்தின் தலைவர் ஆதி கோத்ரேஜ், விஜய் மல்லையா, நடிகர் தனுஷ், பாலிவுட் நடிகர் அமீர்கான், தொழிலதிபர் சிவ நாடார், நடிகர் விஜய் ஆகியவர்களிடம் மட்டும்தான் ரோல்ஸ் ராய் கார் இருக்கிறது என்பது தெரிய வந்துள்ளது

  ரஜினிகாந்த், கமல்ஹாசன், மகேஷ்பாபு, உள்ளிட்ட பிரபலங்களிடம் கூட ரோல்ஸ்ராய் கார் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,140FansLike
  366FollowersFollow
  38FollowersFollow
  74FollowersFollow
  1,562FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-