நடிகர் விக்ரமுக்கு இன்று திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் விக்ரம். தனது நடிப்பாற்றல் மூலமாகத் தமிழ் ரசிகர்களின் பேராதரவைப் பெற்றவர். சேது, விண்ணுக்கும் மண்ணுக்கும், சாமி, பிதாமகன், ஐ போன்ற வெற்றிப் படங்களில் நடித்த விக்ரம், சிறந்த நடிகருக்காக பல்வேறு விருதுகள் பெற்றுள்ளார். தற்போது “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வரும் “பொன்னியின் செல்வன்-1” திரைப்படத்தில் விக்ரம் ‘ஆதித்ய கரிகாலன்’ என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், நடிகர் விக்ரமுக்கு இன்று திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடிகர் விக்ரம் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். அப்போது அவர் வீட்டில் தனிமைப்படுத்தி சிகிச்சை பெற்றார் என்பது குறிப்பிடத்தகக்து.