Homeசினிமாபடம் பாக்க போலாமா? இந்த வாரம் தியேட்டரில் ரிலீஸாசாகும் மாஸ் படங்களை!

படம் பாக்க போலாமா? இந்த வாரம் தியேட்டரில் ரிலீஸாசாகும் மாஸ் படங்களை!

புத்தம் புது படம் பாக்க போலாமா? இந்த வாரம் தியேட்டரில் ரிலீஸாசாகும் மாஸ் படங்களை! ஒவ்வொரு படமும் ஒவ்வொரு ரசனையை ஏற்படுத்தி வரும் என்பதால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

images 2022 09 25T182218.020 1 - Dhinasari Tamil

கடந்த சில ஆண்டுகளாக தியேட்டர் எல்லாம் சர்வதேச தரத்திலான சத்தம் குளிர்சாதன வசதி சுத்தமான சுகாதாரமான உணவு நவீன அடிப்படை வசதிகள் எல்லாவற்றுடன் திரையரங்கில் படம் பார்ப்பது என்பதே ஒரு மகிழ்ச்சியான அனுபவம் தான். அதுவும் மனதிற்கு பிடித்த நடிகர்களின் படம் என்றால் சொல்லவே வேண்டாம். விசில் சத்தமும், கைத்தட்டலும் சும்மா அப்படி இருக்கும்.

அதுவும் பெரிய நடிகர்களின் படம் என்றால் ஆராவாரத்திற்கு பஞ்சாமே இல்லாமல் திருவிழாப்போல அவரது ரசிகர்கள் கொண்டாடுவார்கள்.

அப்படி வாரா வாரம் ஆராவாரத்துடன் படங்கள் வெளியாகி வருகின்றன. இந்த வாரம் திரையரங்கில் வெளியாக உள்ள மாஸ் படங்கள் என்னென்ன என்று பார்க்கலாமா?

images 2022 09 29T162150.642 - Dhinasari Tamil

நானே வருவேன்

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள படம் நானே வருவேன். இந்த திரைப்படத்தில் நடிகர் தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். இந்துஜா ரவிச்சந்திரன், யோகி பாபு, பிரபு, எல்லி அவுரம் என்ற ஸ்வீடன் நாட்டு நடிகை உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். வி கிரியேசன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். நானே வருவேன் திரைப்படம் இன்று செப்டம்பர் 29ந் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

images 2022 09 25T182127.311 1 - Dhinasari Tamil

பொன்னியின் செல்வன்

ஒட்டுமொத்த மக்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த பொன்னியின் செல்வன் திரைப்படம் செப்டம்பர் 30ந் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தில், விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி,ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, சரத்குமார், பார்த்திபன் என அனைத்து நட்சத்திரங்களும் நடித்துள்ளனர். இப்படத்தின் டீசர், டிரைலர், பாடல் என அனைத்தும் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஏகத்திற்கும் ஏகுறி உள்ளது.

images 2022 09 29T162031.754 - Dhinasari Tamil

விக்ரம் வேதா (இந்தி)

விஜய் சேதுபதி, மாதவன் நடித்த விக்ரம் வேதா திரைப்படம் தமிழில் மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தின் இந்தி ரீமேக் படப்பிடிப்பு மாதங்களுக்கு முன் நடைபெற்று முடிந்தது. தமிழில் இந்த படத்தை இயக்கிய புஷ்கர் காயத்ரி ஹிந்தியிலும் இயக்கி உள்ளார். இதில், ஹிரித்திக் ரோஷன் மற்றும் சயிப்அலிகான் ஆகிய இருவரும் விஜய் சேதுபதி மாதவன் கேரக்டர்களில் நடித்து வருகின்றனர். இப்படம் செப்டம்பர் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

images 2022 09 29T162448.980 - Dhinasari Tamil

ஸ்மைல் (ஆங்கிலம்)

ஸ்மைல் திரைப்படம் ஒரு உளவியல் திகில் திரைப்படமாகும் இப்படத்தை பார்க்கர் ஃபின் தனது இயக்குனராக அறிமுகமாகி இயக்கியுள்ளார். இப்படத்தில் டாக்டர் ரோஸ் கோட்டர் நடித்துள்ளார். மேலும், ஜெஸ்ஸி டி. அஷர், கல் பென், ராப் மோர்கன், கைல் கால்னர் மற்றும் கெய்ட்லின் ஸ்டேசி ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் செப்டம்பர் 30ந் தேதி வெளியாக உள்ளது.

images 2022 09 29T162347.193 - Dhinasari Tamil

சாட்டர்டே நைட் (மலையாளம்)

நிவின் பாலி, அஜூவர்கிஸ் நடிக்க ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கி உள்ள மலையாளத் திரைப்படம் படம் சாட்டர்டே நைட். ஜேக்ஸ் பிஜோய் இசையமைத்துள்ள இப்படத்தின் ட்ரெய்லர் அண்மையில் வெளியாகி மக்களிடம் நல்ல ஆதரவை பெற்றது. இப்படம் வரும் செப்டம்பர் 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Most Popular

Follow Dhinasari on Social Media

19,078FansLike
380FollowersFollow
77FollowersFollow
74FollowersFollow
4,112FollowersFollow
17,300SubscribersSubscribe

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

sixteen − 1 =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Cinema / Entertainment

காலங்களில் அவள் வசந்தம் -திரைப்படம் ஒரு பார்வை..

அறிமுக இயக்குனர் ராகவ் மிர்தத் இயக்கியுள்ள படம்காலங்களில் அவள் வசந்தம். படக்குழுவினரை சரியாக பயன்படுத்தியுள்ளார்....

சர்தார் -விமர்சனம்..

‘இரும்புத்திரை’, ‘ஹீரோ’ படங்களை இயக்கியவர் பி.எஸ். மித்ரன். முதல் படத்தில் வங்கி மற்றும்...

பிரின்ஸ் –தீபாவளி ரேஸ் சில் வெற்றி பெருமா.. திரைவிமர்சனம்..

பிரின்ஸ் தீபாவளியை முன்னிட்டு இப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.தமிழ் சினிமாவில் பிரபலமாகி வரும்...

தமிழகத்தில் ரூ.200 கோடி வசூலித்த முதல் தமிழ்த் திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்’..

தமிழகத்தில் ரூ.200 கோடியை வசூலித்த முதல் தமிழ்த் திரைப்படம் என்னும் சாதனையை 'பொன்னியின் செல்வன்'...

Latest News : Read Now...

Translate »
Exit mobile version