விஷால் நடித்த ‘தீராத விளையாட்டு பிள்ளை’, சமர் உள்பட பல படங்களை இயக்கிய இயக்குனர் திரு தற்போது இயக்கி வந்த திரைப்படம் Mr.சந்திரமெளலி. இந்த படத்தின் படப்பிடிப்பு இடைவெளி இன்றி விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில் நேற்றுடன் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளது.
கவுதம் கார்த்திக், அவரது தந்தை கார்த்திக் மற்றும் ரெஜினா, வரலட்சுமி சரத்குமார், சந்தோஷ் பிரதாப், சதீஷ், மகேந்திரன், அகத்தியன், மிமி கோபி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்டிற்கு விக்ரம் வேதா’ புகழ் சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.
ரொமான்ஸ் மற்றும் காமெடிக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ள இந்த படம் வரும் ஏப்ரல் 27ஆம் தேதி ரிலீஸ் ஆகின்றது. இதே நாளில் தான் ரஜினியின் ‘காலா’ ரிலீஸ் ஆகவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.