இளையதளபதி விஜய் கடந்த சில வருடங்களாக தான் நடித்து வரும் படங்களில் ஒரு பாடலை பாடி வருகிறார். ஆனால் ‘மெர்சல்’ படத்தில் மட்டும் அவர் பாடவில்லை. இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டன.
இந்த நிலையில் விஜய் நடித்து வரும் ‘தளபதி 62’ படத்தில் விஜய் ஒரு பாடலை பாடவுள்ளதாகவும், இந்த பாடல் கோலிவுட்டின் ஸ்டிரைக் முடிந்ததும் ஒலிப்பதிவு செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது. இந்த பாடல் ஒலிப்பதிவு செய்யப்பட்டால் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் விஜய் பாடும் முதல் பாடல் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் இந்த படத்தில் விஜய், கீர்த்திசுரேஷ், வரலட்சுமி, யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துவருகின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வரும் இந்த படத்தில் க்ரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவும், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பும் செய்து வருகின்றனர்.