பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் லியோனி, அருண்விஜய் நடித்த ‘கங்கா கெளரி என்ற ஒரே ஒரு படத்தில் மட்டும் நடித்துள்ளார். அதன்பின் அவருக்கு ஒருசில வாய்ப்புகள் வந்தாலும், அவர் முழுநேர பட்டிமன்ற பேச்சாளர் மற்றும் நடுவராக மாறிவிட்டதால் சினிமாவில் நடிக்கவில்லை
இந்த நிலையில் வடிவேலு நடிக்கும் ஒரு படத்தில் அவர் நடிக்கவுள்ளாராம். இதுகுறித்து அவர் கூறியதாவது: வடிவேலு என்னிடம் ஒரு கதை சொல்லியிருக்கிறார். அதில் வடிவேலு, ரோபோ சங்கர், சூரி ஆகியோர் அண்ணன் தம்பிகள். இவர்களுக்கு நான் அப்பாவாக நடிக்க வேண்டும் என்று கூறினார். மீண்டும் என்னுடன் நடிக்க வேண்டும் என்று நடிகர் வடிவேலு விருப்பம் தெரிவித்திருக்கிறார். அதுபோல், இயக்குனர் சீனு ராமசாமியும், அவர் இயக்கும் அடுத்த படத்தில் என்னை நடிக்க வைக்கிறேன் என்று கூறியிருக்கிறார்
மேலும் ரஜினி நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவான சிவாஜி படத்தில் பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா நடித்த கேரக்டர் முதலில் தனக்கு வந்ததாகவும், ஆனால் அந்த படத்தில் நடிக்க தான் மறுத்துவிட்டதாகவும் தெரிவித்தார்
ரஜினி, சிவாஜி, லியோனி, கங்கா கெளரி, வடிவேலு
Dindugul Leoni refused to act in Rajini film