பிரபல ஹாலிவுட் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலனை தெரியாதவர்கள் இருக்க முடியாது. மெமெண்டோ, பேட்ஸ்பேன் பிகின்ஸ், தி டார்க் நைட், இன்செப்ஷன், டங்கிரிக்’ போன்ற படங்கள் சூப்பர் ஹிட் ஆனது. குறிப்பாக டங்கிரிக் திரைப்படம் சமீபத்தில் நடந்த ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் 3 ஆஸ்கார் விருதுகளை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் கிறிஸ்டோபர் நோலன் மும்பையில் நடைபெறும் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இந்தியாவுக்கு வருகை தந்திருந்தார். இந்த நிகழ்ச்சியின்போது கிறிஸ்டோபர் நோலனை கமல் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது ‘டங்க்ரிக்’ படத்தை திரையரங்கில் பார்க்காமல், டிஜிட்டலில் பார்த்ததற்காக வருத்தம் தெரிவித்த கமல், தன்னுடைய அன்பே சிவம் படத்தின் டிவிடியை கொடுத்தாராம்
மேலும் கமல்ஹாசனின் ‘பாபநாசம்’ படத்தை சமீபத்தில் கிறிஸ்டோபர் நோலன் பார்த்து ஆச்சரியம் அடைந்ததாகவும் அவர் கமலிடம் தெரிவித்தாராம்