விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஏற்கனவே காதலும் கடந்து போகும், கவண் ஆகிய படங்களில் நடித்திருந்த நடிகை மடோனா செபாஸ்டியன், மூன்றாவது முறையாக ‘ஜுங்கா’ படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.
ஜூங்கா படத்தில் ஏற்கனவே விஜய்சேதுபதிக்கு ஜோடியாக சாயிஷா நடித்து வரும் நிலையில் மடோனா மேலும் ஒரு நாயகியாக நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது கோலிவுட் திரையுலகின் ஸ்டிரைக்கை மீறி வெளிநாட்டில் நடந்து வருகிறது
சித்தார்த் விபின் இசையமைப்பில் உருவாகி வரும் இந்த படத்தை ‘இதற்குத்தானா ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தை இயக்கிய கோகுல் இயக்கி வருகிறார்.