சதுரங்க வேட்டை படத்தின் மூலம் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய நடிகரும், ஒளிப்பதிவாளருமாகிய நட்டி நட்ராஜ் அடுத்ததாக சில்க் கதையில் நடிக்கவுள்ளார்.
சில்க் கதை என்றாலு சில்க் ஸ்மிதா கதை அல்ல. காஞ்சிபுரத்தில் உற்பத்தியாகும் பட்டு புடவை குறித்த கதை. பட்டுப்புடவைகள் தயாரித்து ஆன்லைனில் ஆர்டர் வாங்கி டோர் டெலிவரி செய்யும் கேரக்டரில் நட்டி நட்ராஜ் நடித்து வருகிறார்.
அவ்வாறு பட்டுப்புடவை ஒன்றை டெலிவரி செய்யும்போது ஏற்படும் காதல், அதனால் ஏற்படும் விளைவுகள்தான் படத்தின் கதையாம்
இந்த படத்தை ஹரி மற்றும் ஹரீஷ் என இரட்டை இயக்குநர்கள் இயக்கவுள்ளனர். சாம் சி.எஸ். இசையமைக்க, ‘சத்யா’ படத்துக்கு ஒளிப்பதிவு செய்த அருண்மணி இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார்.