இந்த வேலைநிறுத்தத்தால் திரையுலகினர் மட்டுமின்றி திரையரங்க உரிமையாளர்களும் கடுமையாக பாதிக்கபட்டுள்ளனர். தியேட்டர் நிர்வாக செலவுக்கு கூட வசூல் இல்லை என பலதியேட்டர் உரிமையாளர்கள் புலம்பி வருகின்றனர்.
இந்த நிலையில் வரும் ஞாயிறு முதல் தெலுங்கு திரைப்படங்களும் தமிழகத்தில் ரிலீஸ் இல்லை என்ற தகவல் வெளிவந்துள்ளது. இந்த நிலையில் வரும் 7ஆம் தேதி முதல் தொடங்கவிருக்கும் ஐபிஎல் போட்டிகளை நேரடியாக திரையரங்கில் ஒளிபரப்ப ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
ஏப். 7 முதல் மே 27 வரை ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்ப அனுமதி தர வேண்டும் என சென்னை காவல் ஆணையருக்கு உதயம் திரையரங்க நிர்வாகம் கோரிக்கை வைத்துள்ளதாக தெரிகிறது. காவல்துறை இதற்கு அனுமதி கொடுத்தால் கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு தியேட்டர் உரிமையாளர்களுக்கு கவலை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது