கடந்த ஒரு மாதமாக எந்த தமிழ்ப்படமும் ரிலீஸ் ஆகாததால் தியேட்டர்களில் கூட்டமின்றி காத்தாடியது. தயாரிப்பாளர்களின் ஒருசில முக்கியமான கோரிக்கைகளுக்கு தியேட்டர் உரிமையாளர்கள் உடன்படவில்லை. எனவே போராட்டம் ஒரு மாதத்திற்கும் மேலாக தொடர்ந்து கொண்டே உள்ளது.
இந்த நிலையில் தமிழ்ப்படம் ரிலீஸ் ஆகவில்லை என்றாலும் பிறமொழி படங்கள் குறிப்பாக தெலுங்கு மொழியில் வெளியாகும் புதிய படங்களை தியேட்டர்களில் வெளியீட்டு வந்ததால் சென்னை உள்பட பெருநகரங்களில் உள்ள தியேட்டர்களில் நல்ல வசூல் கிடைத்தது
இந்த நிலையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திடம் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து வரும் ஞாயிறு முதல் எந்த தெலுங்கு திரைப்படமும் தமிழ்நாட்டில் ரிலீஸ் ஆகாது என்றும், எப்போது ஓடிக்கொண்டிருக்கும் ரங்கஸ்தலம் படமும் திங்கள் முதல் நிறுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே திரையரங்க உரிமையாளர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்