― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeசினிமாசினி நியூஸ்இன்று முதல் விசுவாசம் படப்பிடிப்பு: ஐதராபாத் கிளம்பினார் அஜித்

இன்று முதல் விசுவாசம் படப்பிடிப்பு: ஐதராபாத் கிளம்பினார் அஜித்

- Advertisement -

தல அஜித் நடித்த ‘விவேகம்’ திரைப்படத்திற்கு பின்னர் அவர் அடுத்து நடிக்கவுள்ள ‘விசுவாசம்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த மார்ச் மாதமே ஆரம்பிக்கப்படும் என கூறப்பட்டது. ஆனால் கோலிவுட் வேலைநிறுத்தம் காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு மே 7ஆம் தேதி தொடங்கும் என்று படக்குழுவினர் கூறினர். அதன்படி இன்று இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக அஜித் நேற்று சென்னையில் இருந்து ஐதராபாத்துக்கு விமானத்தில் சென்றார். விசுவாசம் படத்தின் படப்பிடிப்பு தொடர்ச்சியாக நான்கு மாதங்கள் படப்பிடிப்பு நடைபெறவுள்ளதாகவும், வரும் தீபாவளி அன்று இந்த படத்தை ரிலீஸ் செய்ய அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

படப்பிடிப்புக்கு ஐதராபாத் சென்ற அஜித்தின் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் விமான நிலையத்தில் அஜித்தை சந்தித்த பிரபல இசையமைப்பாளர் தமன், அஜித்துடன் எடுத்த புகைப்படத்தை தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.

அஜித், நயன்தாரா, யோகிபாபு, போஸ்வெங்கட் உள்பட பலர் நடிக்கும் இந்த படத்தை சிவா இயக்கவுள்ளார். டி.இமான் இசையமைக்கும் இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version