
இரும்புத்திரை: விஷால்-சமந்தா நடிப்பில் மித்ரன் இயக்கிய படம். இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். விஷால் தயாரித்துள்ளார்.
பாஸ்கர் ஒரு ராஸ்கல்: சித்திக் இயக்கிய மலையாள் ரீமேக் படமான இந்த படத்தில் அரவிந்தசாமி, அமலாபால் நடித்துள்ளனர். இந்த படம் பெரும் எதிர்பார்பை ஏற்படுத்திய படங்களில் ஒன்று
இரவுக்கு ஆயிரம் கண்கள்: அருள்நிதி – மகிமா நம்பியார் நடித்திருக்கும் இந்த படம் ஒரு திகில் படமாகும். இந்த படத்தின் டிரைலரே படத்தின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகையர் திலகம்: பழம்பெரும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்று படமான இந்த படத்தில் சாவித்திரி கேரக்டரில் கீர்த்தி சுரேஷ், ஜெமினி கணேசன் கேரக்டரில் துல்கர்சல்மான் மற்றும் முக்கிய வேடத்தில் சமந்தா நடித்துள்ளனர்.