ஆகஸ்ட் 10ல் ‘விஸ்வரூபம் 2’ ரிலீஸ்

ஆகஸ்ட் 10ல் 'விஸ்வரூபம் 2' ரிலீஸ்

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த ‘தூங்காவனம்’ திரைப்படம் கடந்த 2015ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வெளியானது. அதன் பின்னர் சுமார் இரண்டு ஆண்டுகள் அவர் நடித்த படம் வெளிவராத நிலையில் தற்போது அவர் நடித்து முடித்துள்ள ‘விஸ்வரூபம் 2’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் வரும் ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி வெளியாகவுள்ளது.

‘விஸ்வரூபம் 2′ திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் முடிந்து சமீபத்தில் இந்த படம் சென்சாருக்கு சென்று UA’ சான்றிதழ் பெற்றுள்ளது. இந்த நிலையில் இன்று இந்த படத்தின் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி டிரைலர்கள் மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளது. இன்னும் ஒருசில மணி நேரங்களில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகவுள்ளதை அடுத்து தற்போது ரிலீஸ் தேதியும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கமல்ஹாசன், பூஜாகுமார், ஆண்ட்ரியா, சேகர் கபூர், ராகுல் போஸ்,உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை கமல்ஹாசன் தயாரித்து இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு கமல்ஹாசனின் ஆஸ்தான இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்த படத்தை அடுத்து அவர் நடித்து வரும் ‘சபாஷ் நாயுடு’ திரைப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பும் மிக விரைவில் தொடங்கவுள்ளது.