படுக்கைக்கு அழைத்தவர் பெயரைப் பட்டியலிடும் ஸ்ரீரெட்டி; வாயை அடைக்க முயலும் விஷால்!

srireddy2

நானிக்கு வரிந்து கட்டி ஆதரவு காட்டியுள்ளார் நடிகர் விஷால். அத்துடன், தன்னை படுக்கைக்கு அழைத்தவர்களின் பட்டியலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வரும் ஸ்ரீரெட்டியின் வாயை அடைக்கவும் முயற்சி செய்துவருகிறார்.

தெலுங்கு திரைப்பட உலகை பரபரப்பில் வைத்துள்ளவர் நடிகை ஸ்ரீ ரெட்டி. வாய்ப்புக்காக தன்னை படுக்கைக்கு அழைத்ததாகச் சொல்லி, ஒவ்வொரு நடிகராக அவர்களின் பெயரைக் குறிப்பிட்டு புகார் தெரிவித்து வருகிறார். இப்படி இந்த வாரம் ஸ்ரீரெட்டியின் குற்றச்சாட்டில் சிக்கியவர் நடிகர் நானி.

srireddy1

தெலுங்கு திரையுலக நடிகரான நானி தமிழில் நான் ஈ, வெப்பம் ஆகிய படங்களில் நடித்தவர். நானி மீது கடுமையான பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் ஸ்ரீரெட்டி.

vishall1

இந்நிலையில், தமிழில் விஷால் நடித்து வெளியான இரும்புத்திரை படத்தின் தெலுங்கு பதிப்பு- அபிமன்யுடு படத்தின் வெற்றி சந்திப்பில் விஷால் கலந்து கொண்டார். அவரிடம் ஸ்ரீரெட்டி விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த அவர்,

‘இன்றைய சூழலில் யார் வேண்டுமானாலும் சினிமா கம்பெனி என்ற பெயரில் ஒரு அலுவலகத்தை அமைத்து நடிக்க வைக்கிறேன் என்று நடிகைகளை தவறாக பயன்படுத்தலாம் என்ற நிலை இருக்கிறது.

நானியை எனக்கு நன்றாக தெரியும். நானி மீது ஸ்ரீ ரெட்டி வைத்துள்ள குற்றச்சாட்டு மிகக் கொடூரமானது. இப்போது நானியின் பெயரைக் கூறுபவர் அடுத்து வேறு ஒருவரின் பெயரையும் கூறுவார்.

ஸ்ரீ ரெட்டி இதுபோல் வெளியிடும் இந்த பெயர் விளையாட்டை நிறுத்திவிட்டு தன்னிடம் ஆதாரங்கள் இருந்தால் சட்டப்படி எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை நாட வேண்டும்’ என்று கூறினார்.