சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ரஞ்சித் இயக்கிய ‘காலா’ திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. ரஜினியின் நிஜ கருத்துக்களுக்கு எதிரான கருத்துக்களையும் ரஞ்சித் தனது ஒடுக்கப்பட்டவர்களின் கருத்துக்களை படத்தில் வலிய திணித்துள்ளதாகவும் விமர்சனம் செய்யப்பட்டது.
இந்த நிலையில் ரஞ்சித் தனது பாதையை மாற்றி கொள்ளாவிட்டால் அவர் மீது ஒரு குறிப்பிட்ட முத்திரை குத்தப்படும் அபாயம் இருப்பதாகவும் அவரது ஆதரவாளர்கள் எச்சரித்தனர்.
சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் ‘என்.ஜி.கே.’ என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை அடுத்து அவர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கவுள்ளார். இந்த நிலையில் இந்த இரண்டு படங்களும் முடிந்துவுடன் அவர் ரஞ்சித் இயக்கும் படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது