பிரபல இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள அடுத்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூலை மாதம் லண்டனில் தொடங்கவுள்ளது.
இந்த படத்தில் ஏற்கனவே மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் மற்றும் பிரபல தெலுங்கு நடிகர் அல்லுசிரீஷ் நடிக்கவுள்ள நிலையில் தற்போது மேலும் மூன்று பிரபலங்கள் இணைந்துள்ளனர்
இன்னொருவர் நடிகரும் இயக்குனருமான சமுத்திரக்கனி. இன்னொருவர் பிரபல பாலிவுட் நடிகர் பொமன் இரானி.
லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகவுள்ள இந்த படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைக்கவுள்ளார். சூர்யா நான்கு விதமான கெட்டப்பில் நடிக்கவுள்ள இந்த படத்தின் பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.