October 24, 2021, 9:41 pm
More

  ARTICLE - SECTIONS

  விஸ்வரூபம் 2 – VISHWAROOPAM 2 – வேஸ்ட் ஆஃப் எனர்ஜி …

  viswaroopam 2 - 1


  மிகப்பெரிய சர்ச்சைகளுக்கு நடுவே வந்ததால் ஹிட்டாகியிருக்க வேண்டிய விஸ்வரூபம் படம் ப்ளாக் பஸ்டரானது . பெரிய பப்ளிசிட்டியில்லாமல் வந்திருப்பதால் சுமாரான விஸ்வரூபம் 2  படு சுமாராகிப்போனது . விஸ்வரூபம் பார்க்காதவர்களுக்கு 2 சுத்தமாக புரியாது பார்த்தவர்களுக்கு ஓரளவு புரியும் …

  அமெரிக்காவில் நடக்கவிருக்கும் பேராபத்தை இந்திய ரா உளவாளி விஷாம் காஷ்மீரி & கோ தடுத்த பிறகு ஆப்கானிய தீவிரவாதிகள் இந்தியாவிற்கு வருவதாக முடித்திருப்பார்கள் .தீவிரவாதி ஓமரின்  சதியை காஷ்மீரி முறியடித்தாரா என்பதை எப்படா படத்த முடிப்பாங்க என்கிற அளவு நீட்டி முழக்கியிருப்பதே விஸ்வரூபம் 2 …

  கமல் வழக்கம் போல நடிப்பால் மட்டுமில்லாமல் ஷார்ப்பான டயலாக்கு களாலும் படத்தை தாங்குகிறார் . சக நடிகர்கள் அனைவருக்கும் சம வாய்ப்பு கொடுத்தாலும் தனித்து நிற்கிறார் .அம்மா செண்டிமெண்ட் , ரொமான்ஸ் காட்சிகள் இரண்டிலும் அன்டெர்பிளே செய்து அசத்துகிறார். வில்லன் முஸ்லீம் என்பதால்  ஹீரோ முஸ்லிமை  தேசபக்தனாக முன்னிறுத்துகிறார் . ஒரு பிராமணனை தேசத்துக்காக உயிர் விடுபவனாக காட்டுவதால் இன்னொரு பிராமணனை தேச துரோகியாக்குகிறார் . இப்படி சமன் செய்வதாக நினைத்து  இயக்குனாராக குழப்ப மட்டுமே செய்கிறார் …

  VISHWA - 2

  ஆண்டிரியா வுக்கு ஆக்ஸனோடு சேர்த்து அசத்தல் துள்ளல் நடிப்பு . பூஜாவை வாரும் இடங்களில் வாவ் போட வைக்கிறார் . பூஜாவுக்கு பிராமண பாஷையோடு சேர்த்து கடலுக்குள் போகும் சீனும் . பாத்ரூமுக்குள் குளித்து கமலை  மூடேத்தும் சீனும் வைத்திருக்கிறார்கள் . சேகர் கபூர் , ராகுல் போஸ் எல்லோரும் நிறைவு . படத்திற்கு பெரிய மைனஸ்  முகமது ஜிப்ரானின்
  ( ஜிப்ரான் முகமது ஜிப்ரானாக பதவி உயர்வு !!! ) பின்னணி இசை . சொந்தமாக வும் போடாமல் பார்ட் 1 ஐ சரியாகவும் பயன்படுத்தாமல் சொதப்பி விட்டார் . குறிப்பாக விஸ்வரூபம் 1 இல் எவனென்று நினைத்தாய் பாடலோடு வரும் ஃபைட் படத்துக்கு ஹைலைட் . இதில் அதையே ஸ்லோவாக போட்டு சாவடிக்கிறார் …

  ஒளிப்பதிவு , கலை  , எடிட்டிங் என தொழில்நுட்பத்தில் படம் வேர்ல்ட் க்ளாஸ் .
  திரைக்கதையிலும் கமல் இண்டெலெக்சுவளாக ப்ரீகுவல் , சீக்குவல் இரண்டையும் கலந்த நான் லீனியராக படத்தை சொல்லியிருக்கிறார் . இரண்டுமே சரியாக  சிங்க்  ஆனாலும் நமக்கு தான் ஸ்லோவாக பெரும்பாலான இடங்களில் நேச்சுரல் சவுண்டோடு நகரும் படம் கொட்டாவியை வர வைக்கிறது …

  KAMR - 3

  இங்கிலாந்தில் தண்ணீருக்குள் ஏதோ கெமிக்கல் வெப்பனை  வைத்து சுனாமி யை வரவைக்க போவதாக இண்டெர்வெல்லில் முடிக்கிறார்கள் . அப்புறம் ராகுல் அண்ட் கமல் இருவருக்குமான பெர்சனல் சண்டையாக  படத்தை கொண்டு போகிறார்கள் . ஈஸ்வர் கேரக்டர் இடைச்செறுகளாகவே படுகிறது . க்ளைமேக்ஸ் சண்டையில் ரீ ரிக்கார்டிங் சொதப்பலால் விறுவிறு மிஸ்ஸிங் .

  முதல் பாகத்தை போல பிரம்மாண்டம் காட்டாமல் சிறு வட்டத்துக்குள்ளேயே படம் சுற்றுவதை போல ஒரு ஆயாசம் …

  ஈவு இரக்கம் இல்லாமல் கொல்லும்  ஆப்கான் தீவிரவாதி கமலிடம் நட்பு பற்றியெல்லாம் பேசி பாடம்  எடுப்பது தமிழ்படம் . கமல் கடைசி ஆசை என கேட்கும் போது  என்ன நமாஷ் பண்ணனுமா என ராகுல் போஸ் கேட்பது சீரியஸ் சீனில் நல்ல தமாஷ் . ” நீங்க எந்த மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும் பரவாயில்லை பிரதர் ஆனால் தேச துரோகியாக இருக்கக்கூடாது ” என கமல்  டயலாக் வைத்திருக்கிறார் . அதே போல ” நீங்க எப்படி வேண்டுமானாலும் படம் எடுக்கலாம் பிரதர் ஆனால் குழப்பக்கூடாது ” என்று நாமும் சொல்லலாம்.  படத்திற்கு இருக்கும் சொற்ப ஓப்பனிங்கை பார்க்கும் போது தான் ஆண்டவர் ஏன் சினிமாவை விட்டு அரசியலுக்கு வந்தாரென்று புரிகிறது . நிச்சயம் விஸ்வரூபம் 1 க்கு திருஷ்டி பரிகாரமாக வந்திருக்கும் விஸ்வரூபம் 2 வேஸ்ட் ஆஃப் எனர்ஜி ஃபார் கமல் அண்ட் அஸ் …

  ரேட்டிங்   : 2.5* / 5 * 

  ஸ்கோர் கார்ட் : 40 

  விமர்சனம் :  ‘வாங்க பிளாக்கலாம்’  அனந்த நாராயணன்

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,139FansLike
  368FollowersFollow
  40FollowersFollow
  74FollowersFollow
  1,587FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-