10 ரூபாயில் ஜோக்கர் படம் பார்க்கலாம்

மக்கள் பிரச்னைகளை முன்வைத்து எடுக்கப்பட்டுள்ள படம் ஜோக்கர். இப்படம் கடந்த ஆகஸ்ட் 12ம் தேதி வெளியாகி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் திருப்பத்தூர் ஸ்ரீ ராமஜெயம் தியேட்டரில் வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று 4 காட்சிகளுக்கும் 10 ரூபாய் கட்டணம் மட்டுமே வசூலிக்கப்பட இருக்கிறது.
நல்ல சினிமாவை பொது மக்களுக்குக் கொண்டு செல்லும் முயற்சியாக இதைச் செய்ய உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.