சினிமா சினி நியூஸ் அட்ரஸை தேடிப்போன கிருஷ்ணமூர்த்தி!

அட்ரஸை தேடிப்போன கிருஷ்ணமூர்த்தி!

ஒவ்வொரு சீன்ல வந்தே, பதினைஞ்சு வருஷமா ஃபீல்டுல நிக்கிறேனே... அதுவே பெரிய விஷயமாச்சே! சினிமாவுல எதையெல்லாம் பண்ணக் கூடாதுன்னு தெரிஞ்சுக்கிட்டா போதும்... நிலைச்சு நின்னுடலாம். இது என் சொந்த அனுபவம்.

-

- Advertisment -

சினிமா:

காப்பி அடிச்சு காலத்தை ஓட்டறதுக்கு இவ்வளவு அலம்பலா? கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!

ஆங்கிலத்தில் அமைந்த ஒரு பாடலில் அங்கங்கே தமிழ் வார்த்தைகளை வைத்து, இந்தப் பாடல் மூலம் ஒரு குட்டிக் கதை சொல்லப்பட்டிருக்கிறது

சிம்ரன் ஒரு தீவிரவாதி: சொல்கிறார் இவர்!

தமிழ் சினிமாவில் அனைத்து பிரபல நடிகர்களுடன் நடித்து விட்டவர்...

கத்திரிக்கா முத்தினா கடைவீதிக்கு.. காதலர் தினத்தில் வெளிவந்த பிரபலத்தின் காதல்!

ஜூவாலா கட்டாவை திருமணம் செய்யவே நடிகர் விஷ்ணு விஷால் தனது காதல் மனைவியை விவாகரத்து செய்ததாக தகவல் வெளியானது.

சினிமாவில் நடிப்பை தவிர மற்ற பணியில்.. நடிப்பை நிறுத்தும் சமந்தா!

அதனால்தான் 2, 3 வருடத்துக்குப் பின் சினிமாவில் இருந்து விலகிவிட முடிவு செய்துள்ளேன்
-Advertisement-

தளர்வுற்ற நேரத்தில் சொல்ல வேண்டிய தமிழ் விளையாடும் பதிகம்!

ஒரு வாக்கியம் இவ்வாறு அமைவது அதிசயமாகப் பார்க்கப்படும் நிலையில் ஒரு பாடலை அவ்வாறு அமைப்பது இன்னும் சிரமமான விஷயம்.

வந்தேறிகளின் வம்பு பிரசாரங்கள்! விளைவுகள்; உண்மைகள் (பாகம் 6)

மேற்கத்திய கொள்கை என்னவென்றால், "யாருக்கும் உதவி செய்யத் தேவையில்லை. உன் சுயநலமான வாழ்க்கைப் பயணத்தில் யாரேனும் நன்மை பெற்றால் பெறட்டும்"

கொதிக்கும் எண்ணெயை கணவன் முகத்தில் ஊற்றிய மனைவி! ஏன் தெரியுமா?

வேறொரு பெண்ணுடன் தொடர்பு கொண்டிருப்பதாக சந்தேகித்து கணவர் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றினார் மனைவி.

யாருக்கு மாதவிடாய்?.. 68 மாணவிகளின் உள்ளாடைகளை களைந்து உளவறிந்த நிர்வாகம்!

மாணவர்களிடம் இவ்வளவு மோசமாக நடந்துகொண்ட கல்லூரி நிர்வாகத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்

கோயில்களைப் பாழடித்து, சர்ச் மசூதிகளுக்கு மிதமிஞ்சிய நிதி! அரசின் பாரபட்ச நடவடிக்கைக்கு ராம.கோபாலன் கண்டனம்!

தமிழக அரசு, இந்து கோயில்களை பாழடிக்கிறது, சர்ச், மசூதிகளை பழுது பார்க்க நிதி ஓதுக்கீடு செய்கிறது.. அரசின் இந்த பாரபட்சமான நடவடிக்கையைக் கண்டிக்கிறோம்.. என்று இந்து முன்னணி தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.

ரயில் நிலையத்தில் எச்சில் துப்பினால்… இதான் நடக்கும்! எச்சரிக்கும் போலீஸார்!

விசாகப்பட்டினம் ரயில்வே ஸ்டேஷனில் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர் ரயில்வே போலீஸார்... எதற்கு? வேறு ஒன்றுமில்லை... ஸ்டேஷனில் எச்சில் துப்பினால்… அவ்வளவுதான்! இதான் நடக்கும் என்று எச்சரித்துள்ளனர்.

இஸ்லாமிய கும்பல் ரவுடியிஸம்; மனைவிக்கு உட்கார இடம் கேட்டு கெஞ்சிய கணவன் அடித்துக் கொலை!

சாகர் மார்க்காட் பர்தா அணிந்திருந்த ஒரு பெண் பயணியிடம், கொஞ்சம் நகர்ந்து கொண்டு அமர்ந்து சிறிதளவு இடம் கொடுத்தால், கைக்குழந்தையுடன் நின்று கொண்டு சிரமப்படும் தன் மனைவி அமர்வதற்கு அனுமதிக்கும்படி கேட்டுக்கொண்டார்.

பக்தர்கள் அதிர்ச்சி… மலை மீதிருந்த வேங்கடேஸ்வர ஸ்வாமி கோயில் தேருக்கு தீவைப்பு!

மலை மீதிருக்கும் ஸ்ரீவேங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயத்தின் தேருக்கு தீ வைக்கப்பட்டது பக்தர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தங்கள் கண் முன்பே கோயில் தேர் தீப்பிடித்து எரிந்து கருகியதைக் கண்டு பக்தர்கள் அலறித் துடித்தனர்.

சட்டவிரோத சர்ச்சில் விழா நடத்த முயற்சி! இந்து முன்னணி போராட்டத்தால் தடை!

சட்டவிரோதமாக முளைத்த சர்ச் ஒன்றில் விழா நடத்த கிறிஸ்துவ அமைப்பு முயற்சி செய்த போது, அதனை எதிர்த்து இந்து முன்னணி போராட்டத்தில் இறங்கியதை அடுத்து, விழா நிறுத்தப் பட்டது.

அடப்பாவமே! இப்படியும் நடக்குமா? குரங்குகள் குதறி… பெண் உயிரிழந்த சோகம்!

குரங்குக் கூட்டம் தாக்கியதில் பெண் உயிரிழந்தது தெலங்காணா மாநிலத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.74.73, ஆகவும், டீசல் விலை...

அப்படி போடு சக்கை போடு! ஓட்டுக்கு காசு கொடுத்தால் 3 வருஷம் ஜெயில்! பட்டைய கிளப்பும் ஜெகன்!

தேர்தலுக்குப் பின்னர் தெரிய வந்தால் அவர்களது வேலை பறிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருமணத்தில் முடிவு செய்யும் உரிமை பெண்ணிற்கு இல்லையா? கல்லூரி மாணவி தற்கொலை முயற்சி!

மாலை 3 மணியளவில் திடீரென கல்லூரியின் 4வது மாடிக்கு சென்ற பிரியதர்ஷினி அங்கிருந்து கீழே குதித்தார்.
- Advertisement -
- Advertisement -

‘‘ஹேய்… வடிவேலு காமெடியில வருவாருல்ல…’’ என கிருஷ்ண மூர்த்தியை டக்கென நம்மால் அடையாளம் காண முடியும். ‘‘எக்ஸ்க்யூஸ்மி… இந்த அட்ரஸ் எங்க இருக்குன்னு சொல்ல முடியுமா?’’ என இவர் ஒசாமா பின்லேடன் அட்ரஸைக் கேட்பது ‘தவசி’ படத்தில் வந்த எவர்கிரீன் காமெடி! ‘தெனாலிராமன்’ படத்தில் தெலுங்கு அமைச்சர்…

‘கருப்பசாமி குத்தகைதார’ரில் டீக்கடைக்காரர் எனத் தற்கால சினிமாவில் இவர் முகம் தவிர்க்க முடியாதது. சென்னை வளசரவாக்கத்தில் உள்ள கிருஷ்ணமூர்த்தியின் வீட்டுக்குப் போனால், ஹாலில் மெடல்களும் ஷீல்டுகளும் பரிசுக்கோப்பைகளும்! ‘‘நோ நோ… நான் வாங்கலைங்க… என் மூத்த மகன் கார் ரேஸர். அவர் வாங்கினது அதெல்லாம்..!’’ என வரவேற்கிறார்!

‘‘என்னை ஒரு காமெடி நடிகராகத்தான் உங்களுக்கெல்லாம் தெரியும். ஆனா, இண்டஸ்ட்ரியில நான் புரொடக்ஷன் மேனேஜர். பாலாவோட ‘நான் கடவுள்’ உள்பட டஜன் கணக்கில் படங்கள், ஆயிரத்திற்கும் மேலான விளம்பரப்படங்களுக்கு புரொடக்ஷன் வொர்க் பண்ணியிருக்கேன். சொந்த ஊர் திருவண்ணாமலை. 1983ல சினிமாவுக்கு வந்தேன். ‘குழந்தை ஏசு’ படத்துல ஆபீஸ் பாயா சேர்ந்தேன். அந்தப் படம் பாதி வளர்ந்துட்டு இருக்கும்போது கேஷியர் ஆனேன். முடியும்போது புரொடக்ஷன் மேனேஜர் ஆகிட்டேன்.

ஆனா, எனக்கு நடிக்கத்தான் ஆசை. நான் வேலை செய்யிற படங்கள்ல சின்னச் சின்ன ரோல்கள்ல நடிக்க ஆரம்பிச்சேன். ‘ராசய்யா’ படத்துக்கு புரொடக்ஷன் மேனேஜர் நான். அதில் சில சீன்களை பிரபுதேவாவே டைரக்ட் பண்ண வேண்டியிருந்தது. ‘நான் நடிக்கிறேன் சார்’னு கேட்டேன். ‘மொட்டை போட்டுட்டு வந்தா நடிக்க வைக்கிறேன்’னு அவரும் விளையாட்டா சொன்னார். ஆனா, நான் சீரியஸாவே லஞ்ச் பிரேக்ல போய் மொட்டை போட்டுட்டு வந்துட்டேன். ‘உனக்குள்ள இவ்ளோ வெறியா?’னு ஆச்சரியமாகி, வடிவேலு கூட ஒரு சீன் நடிக்க வச்சார்.

அதுக்கப்புறம் ரொம்ப நாள் கழிச்சு, வடிவேலு என்னை ஞாபகம் வச்சி ‘தவசி’ படத்துல நடிக்கக் கூப்பிட்டார். வடிவேலு சாரை சந்திச்ச பிறகு என் கேரியரே மாறிடுச்சு. அவரோட மட்டும் 26 படங்கள் பண்ணியிருக்கேன்.வடிவேலு சார்கிட்ட கத்துக்க நிறைய இருக்கு. ஒரு படத்தோட கதையைக் கேட்ட உடனே எங்களை எல்லாம் கூப்பிடுவார். அப்போ ஆரம்பிக்கிற டிஸ்கஷன், படத்தோட ஷூட்டிங் தொடங்குறதுக்கு ரெண்டு நாள் முன்ன வரை போகும். ஸ்பாட்டுக்கு போனதும், மறுபடியும் ரிகர்சல் பண்ணி, டீமையே ஜூஸா பிழிய வச்சு, அப்புறம்தான் டேக் போவார்.

வடிவேலு சார் படங்கள்ல எங்களோட டயலாக், மாடுலேஷன், பாடி லாங்குவேஜ்னு அத்தனையும் அவர் சொல்லிக் குடுத்து நடிச்சதுதான். நாம சாதாரணமா போய் நின்னா போதும். மத்ததை அவர் பார்த்துப்பார். அதே மாதிரி ஆக்ஷன் அளவுகோல் தெரிஞ்ச இயக்குநர்கள்கிட்ட மாட்டினா, நம்மை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு போயிடுவாங்க. பாலா சாரை இதுக்கு உதாரணமா சொல்லலாம்.

ரஜினி சார் தவிர எல்லோர் கூடவும் நடிச்சிட்டேன். கமல் சார் கூட ‘அன்பே சிவம்’ல ஒரு சீன்… கம்யூனிஸ்ட் குரூப் கூட உட்கார்ந்திருப்பேன். இப்ப ஜனநாதன் சாரோட ‘புறம்போக்கு’ல நல்ல கேரக்டர் பண்றேன். ‘நான் கடவுள்’ல நான் பண்ணினது ரொம்ப வெயிட்டான கேரக்டர். கொடூரமான முதலாளிக்கும் பாவப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கும் இடையில ‘முருகன்’னு ஒரு சூப்பர்வைஸர் கேரக்டர். அந்தப் படத்துக்காக மாற்றுத்திறனாளிகளோட ஒன்றரை வருஷம் பழகினோம்.

கடைசி நாள் ஷூட்டிங் முடிஞ்சு போனப்போ யூனிட்ல எல்லாருமே சேர்ந்து அழுதுட்டோம்.அன்பான, அளவான ஃபேமிலி என்னோடது. ஜனவரி வந்தா 25வது வருஷ திருமண நாள். என் மனைவி மகேஸ்வரி… எம்.ஜி.ஆர்கிட்ட ஃபைட்டரா இருந்தவரோட பொண்ணு. லவ் மேரேஜ் பண்ணிக்கிட்டோம். 2 மகன்கள். பெரியவன் பிரஷாந்த் கார் ரேஸ் ட்ரெய்னரா இருக்கான், சின்னவன் ஸ்ரீஹரி, +2 படிக்கிறான். ஒரு புரொடக்ஷன் மேனேஜரா நிறைய பார்த்தாச்சு… சச்சின் உட்பட பெரிய கிரிக்கெட் ப்ளேயர்ஸ் கூடல்லாம் விளம்பரப் படங்கள்ல வொர்க் பண்ணியிருக்கேன். நிறைய அனுபவம் இருக்கு.

நடிப்பு எனக்கு ஆர்வம். அதனால அதுல காசு பணத்தையோ, கவுரவத்தையோ பார்க்குறதில்ல. யார் கேட்டாலும் – அது சும்மா தலை காட்டிட்டுப் போற சீனா இருந்தாலும் – நடிச்சுக் கொடுப்பேன். இப்ப புதுசா வர்ற குறும்பட இயக்குநர்கள் எல்லாருக்கும் என்னை நல்லா தெரியும். அவ்வளவு குறும்படங்கள் நடிச்சுக் கொடுத்திருக்கேன். ‘என்னடா, இன்னமும் சின்னச் சின்ன சீன்லயே நடிக்கக் கூப்பிடுறாங்களே’ன்னு என்னிக்கும் நான் வருத்தப்பட்டதில்லை.

அப்படி ஒவ்வொரு சீன்ல வந்தே, பதினைஞ்சு வருஷமா ஃபீல்டுல நிக்கிறேனே… அதுவே பெரிய விஷயமாச்சே! சினிமாவுல எதையெல்லாம் பண்ணக் கூடாதுன்னு தெரிஞ்சுக்கிட்டா போதும்… நிலைச்சு நின்னுடலாம். இது என் சொந்த அனுபவம். மவுத் பப்ளிசிட்டிதான் உண்மையான பப்ளி சிட்டி!’’ – தனது அனுபவங்களை தூவிய கிருஷ்ணமூர்த்தி. இப்போது நம்மிடமிடையே இல்லை! பிரார்த்தனைகள் சார்.

  • மை. பாரதிராஜா
- Advertisement -
-Advertisement-

Follow Dhinasari :

17,972FansLike
208FollowersFollow
761FollowersFollow
16,300SubscribersSubscribe

சமையல் புதிது :

நினைத்தாலே நாவில் நீர் ஊறும் நேந்திர பழ பர்ஃபி!

சர்க்கரையை கம்பி பாகு பதமாக காய்ச்சி… பால், தேங்காய் துருவல், நெய், நேந்திரம் பழ விழுது சேர்த்துக் கிளறவும். கெட்டியானவுடன் இறக்கி, தட்டில் கொட்டி வில்லைகள் போடவும்.

எப்படி செய்யணும் எரிசேரி?

எரிசேரி தேவையானவை: வாழைக்காய் ...

சேமியா ஃப்ரூட் சாலட்

வெனிலா ஐஸ்கிரீம் சேர்த்து மீண்டும் சீராகக் கலக்கவும்
- Advertisement -

தினசரி - ஜோதிட பக்கம்...RELATED
|பஞ்சாங்கம் | வார, மாத, வருட ராசிபலன்கள் | நியூமராலஜி |