அஜித்தை கடுப்படித்த ‘அந்த’ வார்த்தை..! செல்பியுமாச்சு ஒன்னுமாச்சு..! ரசிகர்களைப் புறக்கணித்து ஓட்டம்!

நடிகர் அஜித்தை கடுப்படிக்கும் அளவுக்கு ரசிகர்கள் கூறிய அந்த வார்த்தை இருந்ததால், செல்ஃபி எடுக்க நின்ற ரசிகர்களுக்கு மரியாதை அளித்து நின்று கொண்டிருந்த அஜித், திடீரென அங்கிருந்து விலகி நகர்ந்து சென்றார்.

ajith kumar1

நடிகர் அஜித்தை கடுப்படிக்கும் அளவுக்கு ரசிகர்கள் கூறிய அந்த வார்த்தை இருந்ததால், செல்ஃபி எடுக்க நின்ற ரசிகர்களுக்கு மரியாதை அளித்து நின்று கொண்டிருந்த அஜித், திடீரென அங்கிருந்து விலகி நகர்ந்து சென்றார்.

அண்மையில், ‘தல 60’ படப்பிடிப்பு தொடங்கிவிட்டதாக இணையதளங்களில் அவரின் போலீஸ் கெட்டப் புகைப்படம் வெளியாகி, ரசிகர்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியது. அஜித்தின் வித்தியாசமான கெட்டப்பும் மழு மழுவென பளீரிட்ட முகமும் கச்சிதமான ஹேர்ஸ்டைலும் அவரது ரசிகர்களை செமையாக உசுப்பேற்றியது.

தல 60 படத்தில் அஜித் ஃபிட்டாக இருக்க வேண்டும் என்று இயக்குனர் கூறியதாகவும், அதற்காக அவர் கடுமையான உடற்பயிற்சியில் இறங்கி உடலை சிக் கென்று மாற்றி விட்டதாகவும் கூறுகின்றனர். அஜித்தின் இந்த புதிய லுக்கை பார்ப்பதற்காக ரசிகர்கள் முண்டியடித்து வருகின்றனர்.

ajith 1

அண்மையில் அஜித் உடலை பிட்-டாக வைத்திருக்க, ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலானது. இதைப் பார்த்த ரசிகர்கள் தல 60 என்ற ஹாஸ்டேக் போட்டு டிவிட்டரில் தூள் கிளப்பினர். அஜித் மீது வெறி கொண்ட ரசிகர்கள் சிலர் அவரை கடவுள் ரேஞ்சுக்கு வெளிப்படையாகப் பேசுவதும் உண்டு. பல்வேறு டிவிட்டர் பதிவுகளில் அஜித் கடவுளே.. என்ற வாசகங்களும் இடம்பெற்றிருக்கும்.

ஆனால் ரசிகர்களின் இந்த வாசகம்தான் அஜித்தை அண்மையில் கடுப்பாக்கியது. எப்போதும் தரையிலேயே கால் பதிந்து சாதாரண மனிதனாக தன்னை வெளிப்படுத்தி வரும் அஜித், அரசியல்வாதியாகவும் தொடர்ந்து முதல்வராகவும் ஆசைப்படும் சில சினிமா ஹீரோக்கள் போன்று, படாடோபங்களையோ ஆடம்பர ஆர்ப்பாட்டங்களையோ விரும்புவதில்லை! எனவே அந்த கடவுளே வாசகமும் அவரை கடுப்பேற்றியதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை!

ajith kumar

அண்மையில் அஜித் தில்லியில் நடைபெற்ற துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொள்ள விமான நிலையம் சென்றார். ரசிகர்கள் சிலர் விமான நிலையத்தில் வைத்து அவரை சந்தித்துள்ளனர். அப்போது அவரை சூழ்ந்து நின்று செல்ஃபி எடுக்க முயன்றனர். ரசிகர்களின் மனநிலை அறிந்து அவர்களுக்கு மதிப்பளிக்கும் விதத்தில், அஜித்தும் அவர்களுடன் நின்று செல்ஃபி எடுத்துக் கொள்ள வசதியாக நின்றார். ஆனால் அப்போது ரசிகர்கள் சிலர், கடவுளே, கடவுளே என்று கோஷமிட… கடுப்பான அஜித், உடனே அங்கிருந்து நகர்ந்து சென்றுவிட்டார்.!

Advertisements
வெள்ளித்திரை செய்திகள் :