ஆடைத் துறப்பை அடுத்து… அமலா பாலின் அடுத்த அதிரடி!

லஸ்ட் ஸ்டோரீஸ் என்ற தலைப்பில் உருவாகும் தெலுங்கு வெப் சீரிஸில் ஒரு கதையில் சர்ச்சைக்கு உரிய ஒரு வேடத்தில் நடிக்கிறார் அமலா பால்.

amala pal

லஸ்ட் ஸ்டோரீஸ் என்ற தலைப்பில் உருவாகும் தெலுங்கு வெப் சீரிஸில் ஒரு கதையில் சர்ச்சைக்கு உரிய ஒரு வேடத்தில் நடிக்கிறார் அமலா பால்.

அண்மையில் ஆடை படத்தில் ஆடையின்றி அமைந்திருப்பது போன்ற ஒரு காட்சியில் மேலாடை இன்றி நடித்து புரட்சியை ஏற்படுத்தினார் நடிகை அமலா பால். தற்போது, லஸ்ட் ஸ்டோரீஸ் தலைப்பில் ஒரு கதையில் சுய இன்பம் அனுபவிக்கும் பெண்ணாக அவர் சர்ச்சைக்குரிய வேடத்தில் நடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

amalapaul

இது குறித்து வெப் சீரிஸ் இயக்குனர் நந்தினி ரெட்டி கூறுகையில், இந்தக் கதை பலருக்கு அதிர்ச்சியை அளிக்கும் வகையில் இருக்கலாம். ஆனால், சமுதாயத்துக்கு தேவையான விஷயத்தை சொல்ல இருக்கிறோம். குறிப்பிட்ட இந்தக் கதாபாத்திரத்துக்கு அமலாபாலைத் தவிர வேறு எவரையும் என்னால் நினைத்துக் கூடப் பார்க்க இயலவில்லை என்றுள்ளார்.

ஆயினும் அமலாபாலின் இந்த அதிரடி வேடங்கள் பலரையும் முணுமுணுக்க வைத்துள்ளது.

Advertisements
வெள்ளித்திரை செய்திகள் :