பப்பிக்காக பாடும் கௌதம் மேனன்!

gowtham

வெற்றி படங்களை தயாரித்து வரும் தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி கனேஷ் தயாரிப்பில் உருவாகி உள்ள பப்பி படத்தில் இயக்குனர் கவுதம் வாசுதேவ மேனன் ஒரு பாடல் பாடியுள்ளார்.

யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் பப்பி திரைப்படம் கவுதம் இயக்குனர் பாடகர் நடிகர் என பன்முகத்தன்மை கொண்டவர் இவர் இதற்கு முன்பே நீதானே என் பொன் வசந்தம் படத்தில் ஒரு பாடலை இசைஞானி இளையராஜா இசையில் பாடியிருந்தார். அதற்கு பின் இப்படத்தில் பாடியிருக்கிறார் இந்த பாடலுக்கு வரிகள் தந்துள்ளார் ஆர்.ஜே.விஜய்.

ஆர்.ஜே.விஜய் சில படங்களில் பாடல்கள் எழுதி உள்ளார். சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான மிஸ்டர்.லோக்கல் படத்தில் டக்குனு டக்குனு மற்றும் கலக்கலு மிஸ்டர்.லோக்கலு என்ற பாடலையும் எழுதி இருக்கிறார்.

gowtham 1

இந்த படம் அக்டோபர் 11 திரைக்கு வர இருக்கிறது. இந்த படம் வெளியாவதையொட்டி படத்தில் இயக்குநர் கவுதம் மேனன் பாடிய பாடலின் மேக்கிங் சோனி யூடியுப் பக்கத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது பப்பி படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு நொடியினில் நாம் நிலை தவறியதால் இரு நாள் வாழ்வே என்ற அழகான மெலடியான பாடல் ஒன்றை பாடியிருக்கிறார். பப்பி படத்தில் வருண், நாயகி சம்யுக்தா ஹெக்டே, யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

வருண் இந்த படத்தில் கதநாயகனாக அறிமுகமாகிறார். இவர் ஐசரி.கணேஷின் மகன் இவர் தலைவா, போகன், வனமகன், எல்.கே.ஜி, கோமாளி ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தவர். இந்த படம் அடல்ட் காமெடி ஜார்னரில் உருவாகி வருகிறது.

இந்த படத்தை இயக்கியவரின் பெயர் முரட்டு சிங்கிள் என படத்தின் முன்னோட்டத்தில் போடப்பட்டிருந்தது .அதற்கு மேல் இயக்குநரின் உண்மையான பெயர் பற்றிய தகவல்களை படக்குழு வெளியிடவில்லை.

இந்த படம் அக்டோபர் 11 திரைக்கு வர இருக்கிறது. இந்த படம் வெளியாவதையொட்டி படத்தில் இயக்குநர் கவுதம் மேனன் பாடிய பாடலின் மேக்கிங் சோனி யூடியுப் பக்கத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisements
வெள்ளித்திரை செய்திகள் :