spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeசினிமாசினி நியூஸ்அடுத்த ஷகீலான்னு என்னை கவர்ச்சி நடிகையா சித்திரிக்காதீங்க: கெஞ்சும் சோனா!

அடுத்த ஷகீலான்னு என்னை கவர்ச்சி நடிகையா சித்திரிக்காதீங்க: கெஞ்சும் சோனா!

- Advertisement -

நல்ல கதை அம்சம் உள்ள படங்களில் நடிப்பதை மட்டுமே எண்ணமாகக் கொண்டு படங்களை தேர்வு செய்து நடித்து வருவதாகக் கூறும் நடிகை சோனா, தமது நடிப்பிற்குத் தீனி போடும் வகையிலான கதைகள் தற்போது தேடி வரத் தொடங்கியுள்ளதாகக் கூறுகிறார்.

இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு தயாரிக்கப்பட்ட மலையாளப்படமான பச்சமாங்கா என்ற படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார் சோனா. இப்படத்தில் அவரோடு நடிகர் பிரதாப் போத்தனும் நடித்துள்ளார். ஜெஷீதா ஷாஜி, பால் பொன்மணி ஆகியோர் தயாரித்துள்ள இப்படத்தை ஜெய்ஸ் இயக்கியுள்ளார். இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் ட்ரைலரில் நடிகை சோனாவின் கவர்ச்சியான உடை குறித்து பலரும் அதிருப்தி கிளப்பினர். அதைப் பார்த்துவிட்டு சோனா இப்படத்தில் மிக கவர்ச்சியாக நடித்துள்ளார் என்று செய்தி பரப்பி வருகிறார்கள்.  தமிழ் நாளிதழ் ஒன்றில் “ஷகிலா வழியில் சோனா கவர்ச்சியாக நடிக்கிறார்” என்பது போன்ற செய்தி வெளியானது..

இதுகுறித்து தனது கருத்தைத் தெரிவித்த சோனா, இப்படம் சுமார் இரண்டரை வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே நான் இனி கவர்ச்சியாக நடிக்கப் போவதில்லை என திட்டவட்டமாக தெரிவித்து விட்டேன். இந்தப் பச்சை மாங்கா படம் அப்படி கவர்ச்சியை அடிப்படையாக கொண்ட படமாக இருந்தால் பிரதாப் போத்தன் எப்படி நடிப்பார்?” என்ற கேள்வியை நடிகை சோனா எழுப்பியுள்ளார்.

மேலும் இந்தப் படம் குறித்து அவர் விளக்கியபோது, “பச்சமாங்கா படம் ஒரு கனமான கதையை அடிப்படையாக கொண்ட படம். நம் பாலு மகேந்திரா சார் படம் போல பக்கா க்ளாஸியான படம் அது. அப்படத்தின் ட்ரைலரில் என் உடை மற்றும் சிறிது நேர நடிப்பைப் பார்த்து பலர் நான் அதி கவர்ச்சியான நடிகை என்பது போன்ற பிம்பத்தை ஏற்படுத்தி வருகிறார்கள். அது உண்மை அல்ல.

கேரளாவில்   பெண்கள்   எப்படி உடை அணிவார்களோ அதை அப்படியே பிரதிபலிக்க வேண்டும் என்பதால்  தான் படத்தில் அப்படியான உடையை அணிந்திருந்தேன். இந்தப் படத்தை என் உடை மூலமாக கவர்ச்சி படம் என்றோ, என்னை கவர்ச்சி நடிகை என்றோ சித்திரிக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

இது மிக சிறப்பான படம். என் கதாப்பாத்திரமும் அப்படியே. படம் வந்தபின் இந்த வார்த்தையை அனைவரும் சொல்வார்கள்” என்றார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe