தனுஷ் நடிப்பில் மீண்டும் ஒரு படத்தை இயக்குகிறார்.
சென்னை: தனுஷ் படத்தின் ஹீரோயின் லுக் இணையதளத்தில் லீக் ஆனதால், படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது.
நடிகர் தனுஷ் இந்தியில் ராஞ்ஜனா என்ற படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தை இயக்கியவர் ஆனந்த்.எல்.ராய். இவர் ‘தனு வெட்ஸ் மனு’ உட்பட சில இந்தி
படங்களை இயக்கியுள்ளார். இவர், தனுஷ் நடிப்பில் மீண்டும் ஒரு படத்தை இயக்குகிறார்.
அட்ரங்கி ரே என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் தனுஷூடன், அக்ஷய் குமார், பாலிவுட்டின் இளம் ஹீரோயின் சாரா அலிகான் ஆகியோர் நடிக்கின்றனர். ஏ.அர்.ரகுமான் இசை அமைக்கிறார். பூஷன்குமார் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஹிமன்ஷு சர்மா கதை எழுதியுள்ளார். ஷூட்டிங் கடந்த ஒன்றாம் ஆம் தேதி
தொடங்கியது.
இந்தப் படம் தொடர்பான அறிவிப்பும் தனுஷ், அக்ஷய், சாரா ஆகியோரின் புகைப்படங்களும் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியிடப்பட்டன. இந்தப் படத்தில் நடிக்க
அக்ஷய் குமாருக்கு ரூ.120 கோடி சம்பளம் என்று கூறப்படுகிறது. இதில் சாரா அலிகான் இரண்டு வேடங்களில் நடிக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாயின.
இதற்கிடையே இந்தப் படத்தில், சீனியர் ஹீரோக்களான அக்ஷய் குமார், தனுஷுடன் நடிப்பது ஏன் என்று நடிகை சாரா அலிகான் சமீபத்தில் விளக்கம் அளித்தார். ‘ஸ்கிரிப்டைபடித்தபோது எனக்கு தயக்கமாக இருந்தது.அழுத்தமான கேரக்டர். என்னால் அப்படி நடிக்க முடியுமா? என்று சந்தேகம் இருந்தது. பிறகு இது
சவால்தான். செய்வோம் என்று சம்மதித்தேன். என்னுடன் நடிக்கும் அக்ஷய்குமார், நான் ரசிக்கும் நடிகர். தனுஷ், சிறந்த நடிகர்’ என்று
கூறியிருந்தார்.