கட்டுப்பாடுகளையும் விதிக்க கூடாது
கொரோனா பரவலை தடுக்க மத்திய அரசு 21 நாட்கள் ஊரடங்கு பிறப்பித்து உள்ளது. இதையும் மீறி வெளியே சுற்றுபவர்கள் மீது போலீசார்
வழக்குப்பதிவு செய்தும், லத்தியால் அடுத்து விரட்டியும், தோப்புக்கரணம் போட வைத்தும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
இதுகுறித்து மலையாள நடிகர் சுரேஷ் கோபி கருத்து தெரிவித்து கூறியதாவது:- ஊரடங்கை மீறி நடப்பவர்களை முக்கியமான உறுப்புகள்
பாதிக்காத வகையில் போலீசார் அடிப்பது தவறு அல்ல. சிலரை அடித்துத்தான் திருத்த முடியும். இதற்காக போலீசார் மீது புகார் சொல்ல கூடாது.
அவர்களுக்கு கட்டுப்பாடுகளையும் விதிக்க கூடாது. போலீசார் மக்களுக்காக வேலை செய்கிறார்கள். அவர்களின் சேவையை பாராட்ட வேண்டும்.