மாஸான கதையை கூறி விஜய்யை கட்டிபோட்ட சசிகுமார்

vijay97விஜய் தற்போது சிம்பு தேவன் இயக்கத்தில் புலி என்று பெயர் வைக்கப்பட்டுள்ள பேண்டஸி படத்தில் நடித்து வருகிறார். இதன் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது கேரளாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. புலி படம் விஜய்யின் பிறந்தநாளன்று வெளியாகும் என்று கூறப்படுகிறது. இதையடுத்து தன்னுடைய 59வது படத்தை இயக்கும் பொறுப்பை அட்லீயிடம் ஒப்படைந்துள்ளார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா, எமி ஜாக்சன் நடிக்கவிருக்கின்றனர். இதில் விஜய் போலீஸ் அதிகாரியாக நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இந்த காதல் மற்றும் ஆக்ஷன் கலந்த படத்தையடுத்து விஜய் எந்த படத்தில் நடிப்பார் என்ற கேள்வி தற்போதே ரசிகர்கள் மனதில் கோலொங்கி உள்ளது. இந்நிலையில் விஜய்யின் 60வது படத்தை சசிகுமார் இயக்கவிருக்கிறார் என்ற ருசிகர தகவல் ஒன்று நம்பதகுந்த வட்டாரங்களிலிருந்து கிடைத்துள்ளது. சசிகுமார் கூறிய கதை விஜய்க்கு மிகவும் பிடித்து போனதால் கைவசம் உள்ள இரண்டு படங்களில் நடித்து முடித்துவிட்டு நடிப்பதாக கூறியுள்ளாராம்.