ஹாட் ஃபோட்டோ போட்டு காலை வணக்கம் சொன்ன சாக்‌ஷி!

சீசன் 3 மூலம் அதிக புகழ் பெற்ற அவருக்கு, அதற்கு பிறகு பட வாய்ப்புகள் வந்தன.

சென்னை: பிக்பாஸ் நடிகை வெளியிட்டுள்ள புதிய போட்டோவை ரசிகர்கள் கவிதையாக வர்ணித்துள்ளனர். பிரபல பிக்பாஸ் பிரபலமும் நடிகையுமான சாக்‌ஷி அகர்வால்,

cd62cef57c81d31cbfd9a2329777dd35

இன்ஸ்டாகிராமில் அடிக்கடி போட்டோக்களை பதிவிடுவது வழக்கம். இப்போது வெளியிட்டுள்ள புதிய கிளாமர் புகைப்படங்களை, ரசிகர்கள் கண்டபடி வர்ணித்தும் சிலர் திட்டியும் வருகின்றனர்.

eb1bd25704b8140e7852363bd3b65a87

இந்த போட்டோவுக்கு கேப்ஷனாக, ‘வணக்கம், விரைவில் என் ஒர்க் அவுட்டை தொடங்க இருக்கிறேன். இதற்கு ரசிகர்கள் கண்டபடி கமென்ட் அடித்துள்ளனர்.

b4ea55762405586aea55e211030f9015

‘ஆங்..பாத்தாச்சு பாத்தாச்சு’ என்று ஒரு ரசிகர் கிண்டலாகத் தெரிவிக்க, மற்றொருவர், ‘உங்களோட பிரண்ட் ஆகணும். என் கோரிக்கையை ஏத்துக்கங்களேன்.. பிளீஸ்’ என்று கெஞ்சி இருக்கிறார். இன்னொருவர், இப்படியொரு போட்டோ போடறதுக்கு நீங்க சும்மாவே இருக்கலாம் என்று கூறியுள்ளார். இன்ஸ்டாகிராம் இதயமே, உங்களுக்கு மூச்சு முட்டும் அழகு என்று சிலர் வர்ணித்துள்ளனர்.

54b316ec5e14564a8bd9de5f3f93cd6b

இதற்கு முன் நேற்று வேறொரு போட்டோவை பதிவிட்டிருந்தார் சாக்‌ஷி. அதையும் ஏராளமான ரசிகர்கள் லைக் செய்திருந்தனர். அதில் ஒரு நெட்டிசன், ‘நான் உங்ககிட்ட சிக்ஸ்பேக்கை எதிர்பார்க்கிறேன். சீக்கிரம் ரெடி பண்ணுங்க’ என்று சொல்ல மற்றொருவர், தனிமைப்படுத்தப்பட்டு இருக்கும்போது இப்படியா போட்டோ போடுவீங்க?’ என்று கேட்டிருக்கிறார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

e13de656ec95ae877f79a793fb6544f7

தமிழில், ராஜா ராணி, ரஜினியின் காலா, அஜித்தின் விஸ்வாசம் உட்பட சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தவர் சாக்‌ஷி அகர்வால். ராய் லட்சுமியுடன் சின்ட்ரெல்லா, சக்தி சவுந்தரராஜன் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள டெடி, சுந்தர் சியின் அரண்மனை 3 படங்களில் நடித்து வருகிறார். பிக்பாஸ் சீசன் 3 மூலம் அதிக புகழ் பெற்ற அவருக்கு, அதற்கு பிறகு பட வாய்ப்புகள் வந்தன.

b74f102a4f1bbb5544bf111bf29d32d9

சாக்‌ஷி, அடிக்கடி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் ஹாட் போட்டோக்களை பதிவிடுவது வழக்கம். இதற்காகவே அவர் சிறப்பு போட்டோ ஷுட்டையும் நடத்துவார். இதுபற்றி ரசிகர்கள் கடுமையாக அவரை விமர்சித்தாலும் கண்டுகொள்ள மாட்டார்.

758e39b0e8b52feceb52ce04c4d131c7

அவருக்கு ஆதரவாகவும் எதிராகவும் நெட்டிசன்கள் கருத்து தெரிவிப்பது வழக்கம். சில நேரம் அவரும் ஜாலியானா, கேலியான கேப்ஷன்களை பதிவிடுவார்.

Source: Vellithirai News

Advertisements
வெள்ளித்திரை செய்திகள் :

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.