- Ads -
Home சினிமா சினி நியூஸ் தயாரிப்பாளர் சங்கத்திற்காக இலவசமாக நடிக்கும் சிம்பு.. அந்த மனசுதான் சார் கடவுள்…

தயாரிப்பாளர் சங்கத்திற்காக இலவசமாக நடிக்கும் சிம்பு.. அந்த மனசுதான் சார் கடவுள்…

நடிகர் சிம்பு சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் படத்தை முடித்து கொடுத்துவிட்டு, வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு புதுச்சேரியில் நடைபெற்று வருகிறது.

சிம்பு முன்பு போல் இல்லை பல நாட்கள் தங்கியிருந்து படப்பிடிப்பை முடித்துக்கொடுக்க துவங்கியுள்ளார். 32 நாட்கள் திண்டுக்கல் பகுதியில் தங்கியிருந்த ஈஸ்வரன் படத்தை முடித்துக்கொடுத்தார். தற்போது புதுச்சேரியில் தங்கியிக்கும் அவர் தீபாவளிக்கு கூட வீட்டிற்கு வராமல் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். எனவே, இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படம் முடிந்த பின் தயாரிப்பாளர் சங்கத்தின் நிதிக்காக ஒரு புதிய படத்தில் இலவசமாக நடித்க உள்ளாராம். இப்படத்தையும் வெங்கட்பிரபுவே இயக்கவுள்ளதாகவும், இப்படத்திற்கு ‘மெண்டல்’ என தலைப்பு வைக்க முடிவெடுத்திருப்பதாகவும் செய்திகள் கசிந்துள்ளது. இப்படம் மூலம் தயாரிப்பாளர் சங்கத்திற்கு ரூ.10 கோடி வரை நிதி சேரும் என கருதப்படுகிறது. இது மட்டும் நடந்து விட்டால் தமிழ் சினிமா உலகில் எந்த நடிகரும் செய்யாத ஒன்று சிம்பு செய்தார் என்கிற பெருமை அவருக்கு செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ:  A WAR FOR A BAR சாலா டிரைலர் வெளியீடு!

Source: Vellithirai News

தினசரி செய்திகள்
Dhinasari Tamil News Web Portal Admin

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version