தெலுங்கில் ஏற்கனவே சில படங்களில் நடித்திருந்தாலும் பாகுபலி திரைப்படம் மூலம் இந்திய சினிமா உலகில் பிரபலமானவர் நடிகர் பிரபாஸ். அதேபோல், 5 மொழிகளில் வெளியான கேஜிஎஃப் திரைப்படம் மூலம் சிறந்த இயக்குனராக உயர்ந்தவர் பிரசாந்த் நீல்.இவர் தற்போது கேஜிஎப்ஃ 2 திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படம் முடிவடையும் நிலையில் உள்ளது.
இந்நிலையில், இப்படத்திற்கு பின் பிரபாஸை வைத்து ஒரு புதிய படத்தை இயக்கவுள்ளார். இப்படத்திற்கு சலார் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.