December 6, 2024, 11:09 PM
27.6 C
Chennai

பாடகரான விஜயகாந்த் மகன்… ‘என் உயிர் தோழா’அசத்தல் ஃபர்ஸ்ட்லுக் வெளியீடு

prabakaran

தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு 2 மகன்கள் உண்டு. மூத்தவன் சண்முக பாண்டியன். ஏற்கனவே 2 திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தற்போது அவரின் சகோதரர் விஜய பிரபாகரன் இசைத்துறையில் நுழைந்துள்ளார். என் உயிர் தோழா என துவங்கும் ஒரு பாடலை அவர் பாடியுள்ளார். இந்த பாடல் வீடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, விரைவில் இந்த ஆல்பம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பாடல் வீடியோவை ஜெஃப்ரி ஜோனதன் என்பவர் இசையமைத்து இயக்கியுள்ளார்.

சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் இப்பாடல் தேமுதிக கொள்கைகளை அடிப்படையாக வைத்து ஒரு பிரச்சார பாடலாக உருவாக்கப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது..

இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜயகாந்த் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Source: Vellithirai News

author avatar
தினசரி செய்திகள்
Dhinasari Tamil News Web Portal Admin

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week