- Ads -
Home சினிமா சினி நியூஸ் கை விட்ட ஹீரோக்கள்… ஹரி எடுத்த அதிரடி முடிவு.. அவருக்கு அது சரியான இடம்தான்…

கை விட்ட ஹீரோக்கள்… ஹரி எடுத்த அதிரடி முடிவு.. அவருக்கு அது சரியான இடம்தான்…

hari

தமிழ் சினிமாவில் சாமி, சிங்கம் என அதிரடி ஆக்‌ஷன் படங்களை இயக்கி விக்ரம், சூர்யா போன்ற ரசிகர்களை முன்னணி ஹீரோவாக மாற்றியதில் பெரும் பங்கு இயக்குனர் ஹரிக்கு உண்டு. ஆனால், கடைசியாக இவரது இயக்கத்தில் வெளியான சிங்கம் 3 ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை.

எனவே, கடந்த 3 வருடங்களாக ஹரி இயக்கத்தில் எந்த படமும் உருவாகவில்லை. சூர்யாவை வைத்து ‘அருவா’ என்கிற படம் உருவானது. ஆனால், அப்படத்தின் கதை சூர்யாவுக்கு பிடிக்கவில்லை. எனவே, அவர் நடிக்க மறுக்க ஹரியின் மச்சான் மற்றும் நடிகர் அருண்விஜயை வைத்து அதே கதையை ஹரி இயக்குவதாக செய்தி வெளியானது. ஆனால், அது உறுதிசெய்யப்படவில்லை. மேலும், விக்ரமை வைத்து ஒரு புதியபடத்தை அவர் இயக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளியானது.

இந்நிலையில், பிரபல தெலுங்கு நடிகர் நிதினை வைத்து தெலுங்கு படம் ஒன்றை ஹரி இயக்க முடிவெடுத்திருப்பதாக செய்திகள் கசிந்துள்ளது. ஹரி அரைக்கும் மசாலா தெலுங்கிற்கு அப்பட்டமாக பொருந்தும் என்பதால் இது விரைவில் நடக்கும் என கருதப்படுகிறது.

Source: Vellithirai News

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version