வைரலாகும் ஸ்ரேயாவின் கவர்ச்சி போட்டோ

நடிகை ஸ்ரேயாவின் கவர்ச்சி புகைப்படம் ஒன்று வைரலாகியுள்ளது. உனக்கு 20 எனக்கு 18 படத்தில் கலக்கலான ரோல் மூலம் தமிழில் அறிமுகமானவர் ஸ்ரேயா. பல்வேறு திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருந்த ஸ்ரேயாவுக்கு இப்போது சொல்லிக் கொள்ளும்படி கைவசம் படங்கள் இல்லை. இருப்பினும் மனம் தளராமல் தன்னைத் தேடி வரும் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அண்மையில், ஏஏஏ படத்தில் சிம்பு ஜோடியாக நடித்தார் ஸ்ரேயா. படப்பிடிப்பு துவங்கிய பிறகு, ஸ்ரேயா வேண்டாம், நீக்கிவிடுங்கள் என்று சிம்பு அடம்பிடித்தாராம்.

ஸ்ரேயாவுக்கு இப்போது 35 வயதாகிறது. அவர் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை. தன் இருப்பை வெளிக்காட்ட, அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார் ஸ்ரேயா. இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் பிரபல பத்திரிகைக்கு அரைகுறை ஆடையில் கொடுத்த புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.