ஜிமிக்கி கம்மலை ஓரங்கட்டிய மலையாள பாடல்! கண்ணசைவில் உலகைக் காலடியில் போட்ட ப்ரியா பிரகாஷ் வாரியர்!

ப்ரியா பிரகாஷ் வாரியர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'ஒரு ஆதார் லவ்' படத்தின் டீஸர், காதலர் தினத்தன்று வெளியாகவுள்ளது.

சென்ற வருடத்தின் சூப்பர் ஹிட் பாடலாக ஜிமிக்கி கம்மல், யுடியூப்பை ஒரு கலக்கு கலக்கியது. அதை அடுத்து இப்போது அந்தப் பாடலையும் தூக்கி சாப்பிட்டுள்ளது இன்னொரு மலையாளப் பாடல். ‘மாணிக்க மலராயா பூவி’ பாடலுக்கு இணையத்தில் கிடைத்த வரவேற்பால், அதில் நடித்த ப்ரியா பிரகாஷ் வாரியர் திக்குமுக்காடிப் போயுள்ளார்.

நடிகைகள் பலர் என்னவெல்லாமோ செய்து தங்களை ரசிக்க வைக்க படாத பாடு படுகின்றனர். ஆனால் வெறும் கண்ணசைவில் ரசிகர் உலகையே தன் காலடியில் போட்டிருக்கிறார் பிரியா பிரகாஷ் வாரியர். இப்போது, சமூகவலைத்தளத்தில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்திருக்கிறது.

மலையாளத்தில் ‘ஒரு அதார் லவ்’ படத்திலிருந்து ‘மாணிக்க மலராயா பூவி’ என்ற பாடல் யுடியூப்பில் வெளியிடப்பட்டது. பிப்ரவரி 9-ம் தேதி வெளியிடப்பட்ட இப்பாடலை இதுவரை சுமார் 85 லட்சத்திற்கும் அதிகமானோர் கண்டுகளித்திருக்கிறார்கள். இதில் சில காட்சிகளே வந்தாலும் அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார் ப்ரியா பிரகாஷ் வாரியர்.

கேரளாவின் திருச்சூரைச் சேர்ந்த இவர் 12ஆம் வகுப்பு படித்துக் கொண்டே மாடலிங்கும் செய்து வருகிறார். இப்போது இவருடைய முகபாவனைகள் அடங்கிய ட்வீட்கள் மற்றும் மீம்ஸ்கள் அதிகம் இணையத்தை ஆட்கொண்டுள்ளன.

படம் வெளி வரும் முன்னே பிரபலமாகிவிட்டார் இந்தப் பெண். இயக்குநர்கள் சிலர், இவருக்கு இருக்கும் இந்த எதிர்பார்ப்பை சாதகமாக்கி, தங்களுடைய படங்களில் நடிக்க கேட்டிருக்கிறார்கள். ஆனால், இவருடைய குடும்பத்தினர் 12ஆம் வகுப்பு பரீட்சை முடியட்டும் என்று கூறியுள்ளனராம்.

ப்ரியா பிரகாஷ் வாரியர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ஒரு ஆதார் லவ்’ படத்தின் டீஸர், காதலர் தினத்தன்று வெளியாகவுள்ளது. சமூக வலைத்தளத்தில் எழுந்துள்ள எதிர்பார்ப்பால் படத்தின் டப்பிங் உரிமையைக் கைப்பற்றுவதற்கும் கடும் போட்டி நடைபெற்று வருகிறது.

https://www.youtube.com/watch?v=W0fKl43QmIE