spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeசினிமாசினி நியூஸ்C2H குறித்து இயக்குனர் சேரன் விளக்கம்

C2H குறித்து இயக்குனர் சேரன் விளக்கம்

- Advertisement -

c2h வணக்கம்… எல்லோரின் நலன் கருதி ஆரம்பிக்கப்பட்டதே இந்த C2H நிறுவனம். எந்த காரணம் கொண்டும் இது திரையரங்கிற்கும், விநியோகஸ்தர்களுக்கும் எதிரானது என கருத வேண்டாம். கடந்த 10 வருடங்களாக திரைத்துறையின் வீழ்ச்சிகளும், நஷ்டங்களும் எத்தனை கோடிகள் என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள். அதேபோல் திரைத்துறையை சார்ந்து இயங்கும் திரையரங்கங்களும் எத்தனையோ சதவிகிதம் குறைந்து ஆயிரக்கணக்கில் இருந்து நூற்றுக்கணக்கில் மாறியுள்ளது. இது கடந்த பத்து வருடங்களில் காலம் நமக்கு தந்த தண்டனை… இந்த சூழலில்… வருடாவருடம் திரைப்படங்களின் தயாரிப்புகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு சாதாரண மனிதனுக்குள்ளும் இயக்குநர் கனவும், ஒவ்வொரு வசதி படைத்தவருக்குள்ளும் தயாரிப்பாளர் கனவும் நம்முடைய திரையுலகை நோக்கி படையெடுக்க சொல்கிறது. வரும் அனைவரும் சரியான திட்டமிடல், சினிமாவை பற்றிய போதிய பார்வை இல்லாமல், முதலீடு செய்யும் பணத்தை இழந்து திரையுலகே வேண்டாம் என்ற நிலைக்கு தள்ளப்படுவது போல தான் நமது கட்டமைப்புகள் இயங்கி கொண்டிருக்கிறது. இவற்றை எல்லாம் ஆராய்ந்து பார்த்ததில் வருடாவருடம் வெளியாகும் படங்களின் எண்ணிக்கை வெற்றி பெற்ற படங்களின் எண்ணிக்கை, தோல்வியடைந்த முதலீடு கூட திரும்ப வராத படங்களின் எண்ணிக்கை, வாராவாரம் 4 படங்கள் என்ற நெருக்கடியில் நல்ல திரைப்படங்களுக்கு கூட கூட்டம் வராமல் யாராலும் கண்டுகொள்ளப்படாமல் போகும் நிலை, இவை எல்லாவற்றையும் பயன்படுத்தி திருட்டு DVDகாரர்களான, தயாரிப்பாளர்களின் முதலீட்டை, விநியோகஸ்தர்களின் பங்குத் தொகையை, திரையரங்கின் வருவாயை மொத்தமாக சூரையிடும் ஒரு கும்பலாக (திருட்டு DVD விற்பனை) நாம் நம்மையறியாமலேயே, நம் ஒற்றுமையின்மை காரணமாக வளர்த்து விட்டோம். இன்று இந்த கும்பல் திரைப்படம் வெளியான முதல் நாளே நமது திரையரங்கம் முன்பே வைத்து அப்படத்தின் திருட்டு DVDயை விற்கும் அளவுக்கு பிசாசு போல வாழ்ந்து தயாரிப்பாளர்களையும், விநியோகஸ்தர்களையும், திரையரங்க உரிமையாளர்களையும் சாகடிக்கிறது. பல கனவுகளோடு முதல் படம் இயக்கும் இயக்குநர்களின் வாழ்க்கை அதோடு நாசமாகி போகிறது. இப்படியே பொறுத்துக் கொண்டு எத்தனை நாள் தான் வாழ்வது. மாற்று வழி என்ற ஒன்றை நம் முன்னோர்கள் உருவாக்காமல் போனதின் விளைவு தான் இது. எல்லா இடங்களிலும் ஒவ்வொரு மாற்றமும் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. நம் திரைத்துறையில்… பிலிம் – டிஜிட்டல் ஆனது. புரொஜெக்டர் – QUBE ஆனது பெரிய திரையரங்கம் – MALL ஆனது இவைகள் வியாபாரத்தை பொருத்து, வருவாயை பொருத்து, பிரச்சனைகளை பொருத்து மாற்றியமைக்கப்பட்டது. அது போலவே இப்போது நாம் இந்த மாற்றத்திற்கும் தயார் ஆக நினைக்கிறோம். இதை எல்லாம் நம் அனைவருக்கும் சாதகமாக மாற்றிக்கொள்வது என்ற பொது நோக்கில் யோசித்தால் மட்டுமே தீர்வு காண முடியும். தயாரிப்பாளர்களுக்கு உள்ள பிரச்சனைகள்

 1. படங்களின் உற்பத்தி அதிகம் என்பதால் வியாபாரம் செய்யும்

முறையில் உள்ள தடுமாற்றம். முன்பு போல எடுக்கும் திரைப்படங்களை சரியான விலைக்கு வாங்கவோ, MG, டெபாசிட் முறையில் வாங்கவோ போதிய டிஸ்ட்ரிபியூட்டர்கள் இல்லை.

 1. பெரிய பட்ஜெட் படங்கள் தவிர சமீப காலமாக எந்த விநியோகஸ்தரும்

சிறிய படங்களை அல்லது MEDIUM BUDGET படங்களை அவர்களின் பிரச்சனை கருதி வாங்க முன்வரவில்லை. எந்த முன்பணம் கொடுக்கவும் தயாராக இல்லை.

 1. முன்புபோல திரையரங்கங்கள் கூட எந்த படங்களுக்கும் டெபாசிட்

தொகையோ, MG தொகையோ கொடுக்க முடியாத நிலை.. அதற்கு முன்வரவும் இல்லை… மாறாக சில பெரிய படங்களுக்கு கொடுத்து நஷ்டமடைந்திருக்கிறார்கள்.

 1. முதலீடு செய்த படங்களை 2 கோடி, 3 கோடி என சிறிய படங்களும்,

4 கோடி, 8 கோடி என MEDIUM BUDGET படங்களும் எடுத்து அதை எந்த வியாபாரமும் செய்யாத நிலையில் எப்படி ஒரு திரைப்படத்தை வெளியிட முடியும் என்ற அபாயம்.. அதனால் 300க்கும் மேற்பட்ட படங்களின் தேக்கம்.

 1. இதிலும் சில தயாரிப்பாளர்கள் திரைப்படம் எடுத்து விட்டோமே என்ன

செய்யப் போகிறோம் என தெரியாத நிலையில் மீண்டும் விளம்பரங்கள், திரையரங்கங்கள் என எல்லாவற்றிற்கும் முதலீடு செய்து திரைப்படத்தை வெளியிட்டு கையை கடித்துக் கொண்டு நிற்கிறார்கள். இவர்களின் அறியாமையால் அவர்களின் குடும்பமும் கூட நடுத்தெருவில் நிற்கிறது.

 1. ஒரு திரைப்படத்தினை வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு படம்

மிகப்பெரிய தோல்வி அடைந்ததும் பணத்தை திரும்பக் கேட்டு போராட வழி இருக்கிறது. அதைப் போல தயாரிப்பாளர்களுக்கு கதாநாயகர்களிடமோ, இயக்குநரிடமோ, தொழில்நுட்பக் கலைஞர்களிடமோ தான் முதலீடு செய்த பணத்தை திரும்ப கேட்கும் நிலை இல்லாததால் நஷ்டம் நஷ்டமே…

 1. அதையும் தாண்டி இவ்வாறான சிக்கல்களுக்கு இடையில் ஒரு

திரைப்படத்தை வெளியிடும் போது பாதுகாப்பற்ற நிலை…

 1. உடனடியாக திரையிட்ட முதல் நாளே திருட்டு DVD

வெளிவருகிறது.

 1. முதல் நாள் முதல் காட்சியே கூட்டம் வராமல் படம்

தூக்கப்படுகிறது.

 1. சில நல்ல படங்கள் ஒடுவதற்கான வாய்ப்பு இருந்தும், WORD OF

MOUTH பரவும் முன்பே திரையரங்கின் வாடகை, வசூல் கட்டுபடியாகாமல் அந்த திரைப்படம் திரையரங்கை விட்டு தூக்கப்படுகிறது.

 1. திரைப்படங்களின் உற்பத்தி அதிகம் என்பதால் திரையரங்கம் எல்லா

திரைப்படங்களுக்கும் வேண்டிய காட்சிகளை பிரித்து கொடுக்கும் போது, முக்கிய நகரங்களில் கூட மக்களுக்கு எந்த அரங்கில் என்ன படம் எந்த காட்சி ஓடுகிறது என்பது திட்டவட்டமாக தெரிய வாய்ப்பில்லாமல் போகிறது. அதனால் மக்கள் திரையரங்கம் வரும் போது எந்தபடம் ஓடுகிறதோ அதை பார்க்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது என்பதால் மக்கள் திரையரங்கம் வரும் வாய்ப்பு குறைகிறது.

 1. டிக்கெட் விலை அதிகம் என்பதை விட எந்த படத்திற்கு எவ்வளவு

விற்பார்கள் என்ற தெளிவான நிலை இல்லாததால் மக்கள் டிக்கெட் விலையையும், நேரத்தையும் கருத்தில் கொண்டு திரையரங்கம் வர யோசிக்கிறார்கள்.

 1. திரைப்படங்களுக்கு முன்பெல்லாம் SATELLITE RIGHTS என்று ஏதோ

ஒரு வகையில் வருமானம் இருந்தது. இப்போது அவர்களும் பெரிய அளவில் திரைப்படங்களை வாங்குவதில்லை, பெரிய படங்கள் தவிர… சரி… திரையரங்கில் ஓடினால் வாங்குவார்கள் என்ற நம்பிக்கையில் தயாரிப்பாளர்கள் மீண்டும் முதலீடு செய்து, மேலே சொன்ன பிரச்சனைகள் இருந்தபோதும் கஷ்டப்பட்டு ரிலீஸ் செய்து அங்கேயும் நஷ்டப்படும் போதும் மொத்தமும் இழப்பாகிறது. SATELLITE உரிமைகளையும் யாரும் வாங்க முன்வருவதில்லை.

 1. நல்ல படங்கள், தரமான படங்களை எல்லாம் ஒரு கட்டுக்குள்

கொண்டுவர முடியாத மேற்சொன்ன சூழல்கள் உள்ளபோது தயாரிப்பாளர்கள் வேறு வழியை நாடுவதை யாரும் தடுக்க முடியாது. அந்த இடத்துக்கு தள்ளப்படும்போதே அதற்கான மாற்று வழியும் உண்டாகிறது.

 1. அந்த மாற்று வழிகளை எப்படி எல்லாரும் தங்களுக்கு சாதகமாக

பயன்படுத்தி தயாரிப்பாளர்களை பயனடைய செய்யலாம் என தீர்மானித்ததே C2H உருவானதன் காரணம்.

 1. திரையரங்கங்களில் படம் பார்ப்பவர்கள் திரையரங்கில் பார்க்கத்தான்

செய்வார்கள். அதே நேரம் பெரிய திரைப்படமாக இருந்தாலும் படம் சரியில்லை என்றால் திரையரங்கிற்கு வரும் கூட்டம் நின்றுவிடுகிறது. ஆகவே பெரிய நடிகர், சிறிய நடிகர் என்றாலும், திருட்டு DVD வந்தாலும் திரையரங்க வசூலை யாரும் தடுத்து விடவோ, குறைத்து விடவோ முடியாது என்பதே சரியானது.

 1. PK என்ற இந்திப்படம் சென்னையில் திரையிட்ட MALLகளில் நிறைய

வசூல் செய்திருக்கிறது. திருட்டு DVD இருக்கும் போது இது எப்படி சாத்தியம் என யோசித்தால், நகரங்களில் மட்டுமே இது சாத்தியமாகிறது. எனவே திருட்டு DVDயால் திரையரங்கங்களின் வசூல் குறையும் என்ற காரணம் முற்றிலும் தவறானது.

 1. திருட்டு DVD மூலம் வரும் வருவாயை முறைப்படுத்தி C2H

வருமானம் மூலம் கிடைக்க வழி செய்யலாம் என்ற நல்ல சிந்தனையை DVDகளால் திரையரங்கம் அழிந்துவிடும் என்ற தவறான எண்ணங்களால் தயாரிப்பாளர்களை மேலும் நஷ்டப்படுத்த வேண்டாம்.

 1. வருத்தப்படாத வாலிபர் சங்கம், கத்தி, கும்கி, பிசாசு, PK (HINDI),

அரண்மனை, வெள்ளக்காரதுரை போன்ற பெரிய, சிறிய படங்கள் கூட திருட்டு DVD வந்தும் மிகப் பிரமாதமாக வசூலில் சாதனை செய்தது. அப்படியிருப்பின் DVDகளால் திரையரங்கங்களுக்கு வருமானம் வராது என்று கூறுவது பொய் தானே. திரைப்படங்கள் நன்றாக இருந்தால் திரையரங்கிற்கு மக்கள் வருவதை யாராலும் தடுக்க முடியாது என்பதே உண்மை.

 1. சமீபத்தில் வெளியான மிகப்பெரிய திரைப்படங்கள் அதிக

விலையாலும், படம் சரியில்லாமல் தோல்வியை தழுவியதும் எல்லோருக்கும் தெரியும். அதற்கு திருட்டு DVDயை மட்டுமே காரணம் காட்டிவிட முடியாது என்பதையும் நாம் அறிவோம்.

 1. எனவே விநியோகஸ்தர்களின் நிலைமையும் சரியாக இல்லாமல்,

வாங்குவதற்கு யோசிக்கும் நிலையில், திரையரங்கங்களும் டெபாசிட்டோ அல்லது MGயோ தர முடியாத சூழலில் திரைப்படங்களை எல்லா நிலையிலும் வெளியிட முன் வருவதும், தயாரிப்பாளர்கள் தங்கள் முதலீட்டை திரும்ப பெற நினைப்பதும் நியாயம் தானே. ஆகையால் தான், இந்த திரைத்துறை வீழ்ச்சிக்கு காரணமாக இருக்கும் திருட்டு DVD ஆதிக்கத்தின் ஒழிப்புக்காக கடந்த 10 வருடங்களில் எத்தனையோ முறை பேரணிகள், உண்ணா விரதங்கள் இருந்து அரசாங்கத்திடமும், காவல் துறையிடமும் மனுக்கள் பல கொடுத்து வருகிறோம். எந்தவித மாற்றங்களும், எந்தவித முன்னேற்றங்களும் ஏற்படாத நிலையில் நானும் ஒரு இயக்குநராக, என்னை திரைத்துறையில் தக்க வைத்துக்கொள்ளும் முயற்சிக்காக சினிமா எனக்கு கொடுத்த அடையாளத்தை (FACE VALUE) பயன்படுத்தி கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தமிழகம் முழுவதும் அலைந்து முறையான DVDகளை மக்களுக்கு கொண்டு சேர்ப்பதற்காக 156 விநியோகஸ்தர்களையும், 5000 டீலர்களையும் ஒருங்கிணைத்து CINEMA TO HOME என்ற நிறுவனத்தை துவங்கியுள்ளேன். அது இன்று எல்லோருக்கும் பரிட்சையப்பட்ட எல்லோருமே புதிய திரைப்படங்களை எதிர்பார்த்து காத்திருக்கும், மக்களுக்கு தெரிந்த ஒரு நல்ல நிறுவனமாக உருவாகியிருக்கிறது. இந்த C2H NETWORKஐ என்னை வளர்த்து உருவாக்கிய இந்த திரைத்துறைக்காக பயன்படுத்த நான் தயாராக இருக்கிறேன். இன்றைய முடிவுகளே நாளைய திரைத்துறையின் மறுமலர்ச்சிக்கான துவக்கம் என்பதை மனதில் கொண்டு முடிவு செய்யவும். நன்றியுடன் சேரன்.. [su_youtube url=”https://youtu.be/tIu2Cf_FWfg”]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,100SubscribersSubscribe