தமிழுக்கு நோ; முழு நேர ஹிந்தி நடிகையாகவே மாறிவிட்ட டாப்ஸி

பட்வா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்து வருகிறார் டாப்ஸி. தொடர்ந்து ஹிந்தியில் அமிதாப்புடன் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் டாப்ஸி. சுஜாய் கோஷ் இயக்கும் இந்தப் படம் ஒரு திரில்லர் படமாக உருவாகி வருகிறது. ஏற்கெனவே அமிதாப்புடன் ஒரு படத்தில் நடித்துள்ளார் டாப்ஸி.

தமிழுக்கு நோ சொல்லிவிட்டு, முழு நேரமாக ஹிந்தி நடிகையாகவே மாறிவிட்டார் டாப்ஸி. ஹிந்தியில் அவர் நடித்த நாம் ஷபானா படத்துக்குக் கிடைத்த வரவேற்புக்கு பிறகு டாப்ஸி, இப்போது ஆக்‌‌ஷன் வேடங்களிலும் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளார்.

பட்வா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்து வருகிறார் டாப்ஸி. தொடர்ந்து ஹிந்தியில் அமிதாப்புடன் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் டாப்ஸி. சுஜாய் கோஷ் இயக்கும் இந்தப் படம் ஒரு திரில்லர் படமாக உருவாகி வருகிறது. ஏற்கெனவே அமிதாப்புடன் ஒரு படத்தில் நடித்துள்ளார் டாப்ஸி.

இப்போது டாப்ஸிக்கு ஹிந்திப் பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. எனவே அதில் மட்டுமே இப்போது கவனம் செலுத்தி வருகிறார். தென்னிந்திய மொழிகளில் குறிப்பாக துவக்க காலத்தில் அவரை வளர்த்து விட்ட தமிழ்ப் படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தாலும் மறுத்துவிடுகிறார் டாப்ஸி.