நடிகையிலா தமன்னாவை மணந்த நடிகர் சௌந்தர்ராஜா

நடிகர் சௌந்தர்ராஜா தமன்னா (நடிகை இல்லை)வின் திருமணம் வெள்ளிக்கிழமை இன்று உசிலம்பட்டியில் நடைபெற்றது.

நடிகர் சௌந்தர்ராஜா தமன்னா (நடிகை இல்லை)வின் திருமணம் வெள்ளிக்கிழமை இன்று உசிலம்பட்டியில் நடைபெற்றது.

சுந்தரபாண்டியன், வருத்தப்படாத வாலிபர் சங்கம், தெறி உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருந்த நடிகர் சௌந்தரராஜா. தற்போது கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்து வருகிறார்.

சௌந்தர்ராஜாவுக்கு தமன்னா என்ற பெண்ணுக்கும் கடந்த ஜனவரி மாதம் நிச்சயம் நடைபெற்றது. வெள்ளிக்கிழமை இன்று இவர்களது திருமணம் உசிலம்பட்டியில் நடைபெற்றது. இவர்களது திருமண விழாவில் காளி வெங்கட், ரோகிணி ஆகியோர் கலந்து கொண்டனர். திரைப் பிரபலங்களும், ரசிகர்களும் புதுமண தம்பதியரை வாழ்த்தி வருகின்றனர்.