தமிழில் ஜல்லிக்கட்டு பின்னணிப் படத்தில் மல்லுக்கட்டும் ஷிவானி ராஜசேகர்

டாக்டர் ராஜசேகர் – ஜீவிதா நட்சத்திர தம்பதியரின் மகள் ஷிவானி ராஜசேகர் தமிழில் ஜல்லிக்கட்டு பின்னணியில் உருவாகி வரும் படத்தில் நடிக்கிறார்.

ஹிந்தியில் வெளியான 2 ஸ்டேட்ஸ் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்து வரும் இவர், தமிழ் மற்றும் மலையாளப் படங்களிலும் தற்போது ஒப்பந்தமாகியிருக்கிறார். தமிழில் விஷ்ணு விஷால் நடிக்கும் ஒரு படத்தில் ஒப்பந்தமாகியிருக்கிறார்.

ஜல்லிக்கட்டு பின்னணியில் கிராமப்புறக் கதையில் இந்தப் படம் தயாராகிறது. மலையாளத்தில் மோகன்லாலின் மகன் பிரணவ் மோகன்லால் நடிக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இப்படி, தான் நடித்த முதல் படம் திரைக்கு வரும் முன்பே பரவலாக பல மொழிப் படங்களிலும் கமிட்டாகி வருகிறார் ஷிவானி ராஜசேகர்.