ஒன்னு இங்க இருக்கு… இன்னொன்னு எங்கே? த்ரிஷா போட்ட ரெட்டை இதயம்!

மே மாதத்துடன் 36 வயது முடிந்து தற்போது 37 நடக்கிறது திரிஷாவுக்கு! திரை உலக அனுபவமோ 20 வருஷம். எல்லா சாதனைகளையும் செய்தாச்சு. இன்னும் எதற்காக வெயிட்டிங்?

மோகினி, சதுரங்க வேட்டை 2, கர்ஜனை என மூணு படங்களும் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. அது வெளி வரும்போது வரும்.. கிடக்கட்டும்.

த்ரிஷாவுக்கு குரு பார்வை வந்திருக்கா இல்லையா தெரியவில்லை? தயாரிப்பாளர் வருண் மணியனின் காதல் தனி விமானத்தில் தாஜ்மகால் வரை பறந்து போச்சு. நிச்சயதார்த்தமும் கிராண்டா முடிஞ்சுது. ஆனால் மணமேடை ஏற முடியல.

இந்த நிலையில் திரிஷா தன் டிவிட்டர் பக்கத்துல ரெட்டை இதயத்தை போட்டு… இருவருக்கான ஒரு டேபிள்னு போட… பின்னாடி கமெண்டு கட்டின பயலுஹ அட.. ஒண்ணு இங்க இருக்கு.. அந்த இன்னோன்னு? என்று கமெண்டு போட… ஒரே ரவுசுதான் போங்க…!